ஸ்கூலில் மட்டும் ஹிஜாப்… வெளியில் துப்பட்டா கூட போடுவதில்லை.. சீக்ரெட் உடைத்த மாணவி!

ஸ்கூலில் மட்டும் ஹிஜாப்… வெளியில் துப்பட்டா கூட போடுவதில்லை.. சீக்ரெட் உடைத்த மாணவி!

Share it if you like it

ஸ்கூலுக்கு வரும்போது மட்டும், குறிப்பாக தேர்வு எழுத வரும்போது மட்டும் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதாகவும், மற்ற நேரங்களில் துப்பட்டா கூட அணிவதில்லை என்றும் பீகார் மாணவியின் சீக்ரெட்டை உடைத்திருக்கிறார் மற்றொரு மாணவி.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் எம்.டி.டி.எம். கல்லூரி இயங்கி வருகிறது. பொதுவாக, இக்கல்லூரியில் மாணவிகள் அனைவரும் சீருடை அணிந்துதான் வரவேண்டும் என்பது விதிமுறை. எனினும், கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னை எழுந்த பிறகு, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வர அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த சூழலில், இப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்வின்போதும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வந்தனர்.

மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, யாரும் காப்பி அடிக்கிறார்களா என்பது கண்காணிப்பதற்காக தேர்வு அறையின் கண்காணிப்பாளர் ஒவ்வொரு மாணவிகளாக சோதனை செய்து கொண்டு வந்திருக்கிறார். இதில், இஸ்லாமிய மாணவிகளும் அடக்கம். அவர்களை ஹிஜாப்பை கழற்றச் சொல்லி, காதில் புளூடூத் போன்ற சாதனங்களை வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்திருக்கிறார். அப்போது, ஒரு மாணவி மட்டும் ஹிஜாப்பை கழற்ற மறுத்ததோடு, காதில் புளூடூத் வைத்திருக்கிறாரா என்பதையும் இறுதிவரை தெரிவிக்கவில்லை.

எனினும், ஹிஜாப்பை ஒதுக்கி காதை மட்டும் காட்டுமாறு கண்காணிப்பாளர் கேட்டதற்கு, அந்த மாணவி தேர்வெழுத மறுத்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறி விட்டார். ஆனால், வெளியில் சென்று தான் ஹிஜாப் அணிந்திருந்ததால், தன்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று பொய் சொல்லி, இஸ்லாமிய மாணவிகளை தூண்டி விட்டிருக்கிறார். இதனால், இஸ்லாமிய மாணவிகள் சிலர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்று அதே வகுப்பில் படிக்கும் அம்மாணவியின் தோழி, புட்டுப் புட்டு வைத்து விட்டார்.

இதுகுறித்து மாணவி ஃபாத்திமா கூறுகையில், “மேற்கண்ட மாணவி எனது நெருங்கிய தோழிதான். அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். பள்ளிக்கு வரும்போது மட்டும் ஹிஜாப் அணிந்து வருவார். அதிலும் குறிப்பாக தேர்வு என்று வந்து விட்டால் கண்டிப்பாக ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவார். ஆனால், வெளியிடங்களுக்கு, விசேஷங்களுக்குச் செல்லும்போது சுடிதார் அணிந்திருந்தால் துப்பட்டாகூட போடமாட்டார். தவிர, தேர்வு அறையில் காதில் ப்ளூடூத் அணிந்திருக்கிறாரா என்பதை சோதனை செய்வதற்காகத்தான் ஹிஜாப்பை ஒதுக்கிக் காட்டுமாறு கண்காணிப்பாளர் கூறினார். கழற்றக் கூட சொல்லவில்லை. ஆனால், அந்த மாணவிதான் தேர்வை புறக்கணிப்பதாகக் கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறி விட்டார்” என்று மீடியாக்கள் மத்தியில்பேசி, அம்மாணவியின் ரகசியத்தை உடைத்து விட்டார்.

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களி வைரலாகி வருகிறது.


Share it if you like it