ஹிந்து சிறுவன் கொலை: தைஃப், ஷஹீல், அர்ஷாத் உட்பட 6 பேருக்கு வலை!

ஹிந்து சிறுவன் கொலை: தைஃப், ஷஹீல், அர்ஷாத் உட்பட 6 பேருக்கு வலை!

Share it if you like it

பீகாரில் மாணவிகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட, 10-ம் வகுப்பு படிக்கும் ஹிந்து சிறுவனை, தைஃப், ஷஹீல், அர்ஷாத், அர்பாஸ், முகமது குடு, அலி ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலம் ஜலால்பூர் மாவட்டம் சாப்ரா பகுதியிலுள்ள பட்கேசரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்ய திவாரி. இவர், ஜலால்பூர் பகுதியிலுள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தவிர, 10-ம் வகுப்பு என்பதால் அங்குள்ள டியூசன் சென்டரிலும் சிறப்பு வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில், இவரது டியூசனுக்கு படிக்க வரும் மாணவிகளை தைஃப் என்கிற சோனுகான், ஷஹீல், அர்ஷாத் ஆகியோர் கேலி, கிண்டல் செய்து வந்திருக்கிறார்கள். இதை ஆதித்ய திவாரி தட்டிக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும், மாணவிகள் முன்னிலையிலேயே ஆதித்யாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறார்கள். மறுநாள் ஷஹீல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ‘ஆக் ஜலால்பூர் மே கேலா ஹோ’ என்று போஜ்பூரியில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளியில் பருவத்தேர்வு நடந்திருக்கிறது. வழக்கம் போல ஆதித்ய திவாரி வந்து தேர்வை எழுதிவிட்டு, கிளம்பி இருக்கிறார். அப்போது, தைஃப் என்கிற சோனுகான், ஷஹீல், அர்ஷாத் ஆகியோர் தங்களது நண்பர்களான அர்பாஸ், முகமது குடு, அலி ஆகியோரையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். வெளியே வந்த ஆதித்யாவை 6 பேரும் சேர்ந்து தாக்கியதோடு, மார்பு, வயிறுப் பகுதிகளில் கத்தியால் சரமாரியாகக் குத்தி இருக்கிறார்கள். இதில், ரத்த வெள்ளத்தில் ஆதித்யா மயங்கி சரிந்திருக்கிறார். இதைக்கண்ட மற்ற மாணவர்கள் ஓடிவந்து ஆசிரியர்களிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார்கள். உடனே, ஆசிரியர்கள் பதறியடித்துக் கொண்டு, ஆதித்ய திவாரியை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆதித்யா இறந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.

இதனிடையே, ஆதித்யா கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி முன்பு திரண்ட மக்கள், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பள்ளியிலுள்ள டேபிள், பெஞ்ச், நாற்காலிகளையும் அடித்து நொறுக்கி பள்ளியையும் சூறையாடினர். தகவலறிந்து வந்த போலீஸார், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் காரணமாக பள்ளியும், டியூசன் சென்டரும் பூட்டப்பட்டன. இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மேற்கண்ட 6 பேரையு்ம் தேடி வருகிறார்கள்.


Share it if you like it