சமூக நீதி போதித்த உண்மையான பெரியார் இவர்தான்..! ஸ்ரீ நாராயணகுரு

சமூக நீதி போதித்த உண்மையான பெரியார் இவர்தான்..! ஸ்ரீ நாராயணகுரு

Share it if you like it

அத்வைத (இரண்டற்ற இறைநிலை) தத்துவத் தேடலில் ஈடுபட்டு, படித்துணர்ந்து, அதன்படி வாழ வற்புறுத்திய ஒரு துறவியின் வாழ்க்கைச் சரித்திரம்.

சமூக மாற்றத்தை ஏற்படுத்த
தெய்வீகத்துடன் ஆத்மாவின் ஒருங்கிணைதல்.

,…………….

தனது ஆத்மத்தேடலில் ஒரு வாழ்க்கைப் பயணம்

ஸ்ரீ நாராயணகுரு, 1856ஆம் வருடம்
ஆகஸ்ட் 20ஆம் தேதி, திரு மதன் ஆசான் & திருமதி குட்டியம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தார்.

அன்று பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த ஈழவ சமூகத்தில் பிறந்தவர். இருப்பினும் சம்ஸ்கிருதம், உபநிஷதங்கள் மற்றும் சமய போதனைகளை கற்பதில் அது அவருக்கு தடையாக இருக்கவில்லை.

படிக்க விருப்முடையவர்கள், குருகுலக் கல்விமுறையின் மூலம், கல்வி கற்க ஏதுவாக அக்கால கோட்பாடுகளும் பயன்பாடுகளும் இருந்தன.

சிறுவயது முதலே ஸ்ரீ நாராயணகுரு அவர்கள் நிறையவே பயணப்பட்டார். அத்துடன் தனித்திருப்பதிலும் தியானம் செய்வதிலும் நேரம் செலவழித்தார்.

திருமணமான போதிலும், இல்லற வாழ்வை விடுத்து ஸ்ரீ குரு அவர்கள் தனது ஆத்மத்தேடலில் ஈடுபட்டார்.

ஸ்ரீ நாராயணகுரு – சமூக சீர்திருத்தவாதி:

தெய்வீகம் எல்லோரிடமும் உள்ளது என்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அருவிப்புரம் சிவன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தினார், அங்கு பலகாலமாக வேரூன்றி இருந்த சமய குருமார்கள் விரும்பாதவண்ணம்.

தென்னிந்தியாவின் மிக முக்கிய ஆன்மீகவாதியாக திகழ்ந்த ஸ்ரீ சட்டம்பி சுவாமி அவர்களின் வழிகாட்டுதல் ஸ்ரீ நாராயண குரு அவர்களுக்கு பல நன்மைகளையும், அத்தியாவசிய புரிதலையும் ஏற்படுத்தியது.

ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தெய்வீகத்துடன் ஒன்று சேர்ந்திருப்பதை விரும்பியவர்.

பிறந்த குலம், ஜாதி பார்க்காமல் தெய்வ நம்பிக்கை உள்ள எல்லோரும் வழிபாடு செய்யக் கோவில்களைத் திறந்த “பர்யாட்டம் இயக்க”த்திற்கு தூண்டுகோலாக இருந்தவர்.

தூய்மை, கற்றல், கடவுள் வழிபாடு, நிறுவும்பண்பு, வியாபாரம், சமூக ஒற்றுமை ஆகியவற்றை உள்ளடக்கிய சிவகிரி புனிதப் பயணத்திற்கு ஸ்ரீகுரு அவர்கள் தனது ஆசிகளை அளித்தார் (ஆனால் அது அவர் இவ்வுலகை நீத்தபின் 1932ல் துவங்கியது).

கடவுள் ஒருவரே என்பதை வற்புறுத்தி அனைவருக்கும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுத்தவர்.

சமூகத்தை பிளவுபடுத்தும் தன்மையுடையது என்பதால் மதமாற்றம் செய்வதை ஏற்காதவர்; தெய்வீகத் தேடலின் மூலம் தனிமனித மாற்றத்தை வற்புறுத்தியவர்.

…………..

ஸ்ரீ நாராயணகுரு – தத்துவ ஞானி:

ஸ்ரீ நாராயணகுரு அவர்கள், மலையாளம், சம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் 45 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

அவரது “ஆத்ம உபதேச சதகம்” நூறு ஆன்மீகப் பாடல்களைக் கொண்டது. “நான்யார்” என்ற ஆன்மத்தேடல் பயணத்தை மேற்கொண்டவர்களுக்கு உதவும் வழிமுறைகள். இது ஸ்ரீ நாராயணகுரு அவர்களின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. “தன்னை உணர்தலு”க்குத் தன்னைத் தூய்மை செய்து தயாராக்கும் விதமாக அத்வைத தத்துவத்தை ஒத்திருக்கிறது.

பத்துப் பாடல்களைக் கொண்ட பொதுவான வழிபாடு “தெய்வ தசகம்”. இதில் ஸ்ரீ குரு அவர்கள் கடவுளின் வழிகாட்டுதலை வேண்டுகிறார். வாழ்க்கைக்கடலில் கப்பலோட்டும் தலைவனாக இறைவனும், வாழ்வின் பல மாற்றங்களையும் எதிர்கொள்ளும் பயணியாக மனிதரையும் உருவகம் செய்கிறார்.

ஸ்ரீ குரு அவர்கள், வள்ளுவரின் திருக்குறள், ஈசாவாஸ்ய உபநிஷதம் மற்றும் கண்ணுடைய வள்ளலாரின் “ஒழிவில் ஒடுக்கம்” ஆகிய மூன்று பெரும் நூல்களுக்கு மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார்.
..,…..,…..,..

ஸ்ரீ நாராயணகுரு அவர்களின் உபதேசம் – நமது தொடர்ந்த நற்செயல்களால் நம்முள் இருக்கும் சிவனை நாடியடைவோம்!

ஸ்தக்ஷேப்யோ ரதகாரேப்யஸ்ச
வோ நமோ நம: – 4.2.4

(தச்சராக இருப்பவரையும்
ரதம் செய்பவராக விளங்குபவரையும்
மீண்டும் மீண்டும் வணங்குகிறோம்)

குலாலேப்ய கர்மாரேப்யஸ்ச
வோ நமோ நம: – 4.2.5

(குயவராக இருப்பவரையும்
கருமாராக விளங்குபவரையும் மீண்டும் மீண்டும் வணங்குகிறோம்)

ஸ்ரீ ருத்ரம் 4வது அனுவாகம்

 

Ramasubramaniam

(Columnist)


Share it if you like it

One thought on “சமூக நீதி போதித்த உண்மையான பெரியார் இவர்தான்..! ஸ்ரீ நாராயணகுரு

Comments are closed.