பா.ஜ.க. இல்லாமல் அ.தி.மு.க.விற்கு 100% வெற்றி கிடையாது; மூத்த பத்திரிகையாளர் கருத்து!

பா.ஜ.க. இல்லாமல் அ.தி.மு.க.விற்கு 100% வெற்றி கிடையாது; மூத்த பத்திரிகையாளர் கருத்து!

Share it if you like it

பா.ஜ.க.வை தவிர்த்து விட்டு அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

தமிழகம் நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர், இந்தியா கிளிட்ஸ் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் ;

2026- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க. தனியாக சந்திக்க முயன்றால் இப்போதே, அவர்களது தோல்வி உறுதி. இது, 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கும் பொருந்தும். தே.மு.தி.க., பா.ம.க, பா.ஜ.க., டி.டி.வி. தினகரன், சசிகலா ஆதரவு, ஓபிஎஸ், புதிய தமிழகம், வாசன் என அனைவரும் இணைந்து கூட்டணி அமைத்தால் தான் 15-ல் இருந்து 16 இடங்களை அந்த கூட்டணியால் வெற்றி பெற முடியும். ஆனால், 24 இடங்களை தி.மு.க. தான் வெல்லும். ஏனெனில், அவர்கள் தான் ஆளும் கட்சியாக இருக்கிறார்கள். அதிகாரம், அவர்களிடம்தான் உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 16, 17 என்று அதிகரிக்க வேண்டுமே தவிர குறைய கூடாது. இதில், வெற்றியடைந்தால் மட்டுமே 2026 – ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து சிந்தித்து பார்க்க முடியும். இந்த கூட்டணி அமையவில்லை என்றால் 16 (எம்.பி.க்கள்) இடங்கள் வராது. அதேபோல, 2026 – ஆம் ஆண்டு அவர்களால் ஆட்சிக்கும் வர முடியாது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it