நிலக்கரி ஏல நடவடிக்கையை ரத்து செய்த மத்திய அரசுக்கு தஞ்சை விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :
தஞ்சையில் விவசாயச் சங்கங்கள் சார்பில் டெல்டா பகுதியில் நிலக்கரி ஏல நடவடிக்கைகளை ரத்து செய்த மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் மாண்புமிகு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ஒரு விவசாயியாகக் கலந்து கொண்டேன்.
விவசாயத் தமிழர் விழிப்புணர்வு நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே. நாகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
காவிரி நதி நீர்ப்பிரச்சனை தொடங்கி, நிலக்கரி, மீத்தேன் ஒப்பந்தம், வடசேரி எரிசாராய ஆலை என ஆண்டாண்டு காலமாக டெல்டா பகுதிக்கு தொடர்ச்சியாக துரோகம் இழைத்து வருகிறது தி.மு.க.
காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைத்து, காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு அளித்ததோடு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் நம் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி.
நம் டெல்டா பகுதி விவசாயிகள் நலனுக்காக, பாரதிய ஜனதா கட்சி எப்பொழுதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து எங்கள் முதல்வரின் முதல் கையெழுத்தே விவசாயிகள் நலம் சார்ந்ததாகத்தான் இருக்கும் என்றும் உறுதி அளித்தேன் என தெரிவித்துள்ளார்