பா.ஜ.க.வின் வளர்ச்சி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குமுறிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு அக்கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை கலக்கம் அடைந்து இருக்கின்றன. இதே கருத்தை பல அரசியல் நோக்கர்களும் தொடர்ந்து கூறிவருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மேலும், தமிழகத்தின் மூன்றவாது பெரிய கட்சி என்ற பெயரையும் பா.ஜ.க. பெற்று இருந்தது.
இப்படியாக, பா.ஜ.க.வின் வளர்ச்சி இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் பொழுது இவ்வாறு பேசினார்;
தென்னிந்திய பக்கம் எல்லாம் பா.ஜ.க.வால் நுழைய முடியாது. அவர்களால், வாலாட்ட முடியாது என கூறி வந்தோம். இது வேறு மண், பெரியார் மண் என்று சொல்லிக் கொண்டு இருந்தோம். ஆனால், இன்று அவர்கள் அடியெடுத்து வைத்து இருக்கிறார்கள். இன்று பேசுப் பொருளாக அவர்களே மாறி இருக்கிறார்கள். தமிழக அரசியலை ஒவ்வொரு நாளும் இன்று அவர்களே தீர்மானிக்க கூடியவர்களாக மாறியுள்ளனர் என திருமாவளன் குமுறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு எதிராக போராட வேண்டியது என்பது அண்ணாமலை வந்த பிறகு கஷ்டமானதாக மாறிவிட்டது இதுதான் உண்மை. அவர் புது புதுசா செய்கிறார். அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன் அரசியலில் அவர் ஆபத்தான மனிதர். அதற்கு, முன்னாள் இருந்த பா.ஜ.க தலைவர்களோடு நான் பழகி இருக்கிறேன். இல.கணேசனை பார்த்து இருக்கிறேன், பொன்னாரை பார்த்து இருக்கிறேன், சி.பி.ராதாகிருஷ்ணன் பார்த்து இருக்கிறேன், தமிழிசை செளந்தரராஜனை பார்த்து இருக்கிறேன். அவர்களிடம், இல்லாத ஒன்று கட்சியை வளர்க்க எந்த எல்லைக்கும் செல்லும் சக்தி மிக்க மனிதராக அண்ணாமலை இருக்கிறார். வருங்காலத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து எதிர்த்தால் மட்டுமே அண்ணாமலையை எதிர் கொள்ள முடியும் என பத்திரிக்கையாளர் மணி முன்பு ஒருமுறை பிரபல இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கதறி இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான், வி.சி.க. தலைவர் திருமாவும் அலறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.