தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து பிரபல யூடியூபர் ராஜவேல் நாகராஜன் தெரிவித்து இருக்கும் கருத்திற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றனர்.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரது, தலைமையின் கீழ் அக்கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தின், ஒரே இளம் அரசியல் தலைவராக இவர் மட்டுமே இருந்து வருகிறார், என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும், இவரது எழுத்துக்கள், பேச்சுக்கள் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறது. அந்த வகையில், இளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்களின் விருப்பத்திற்குரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து இருக்கிறது.
பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்கும் விதமாகவும், அண்ணாமலையில் நற்பெயரை கெடுக்கும் விதமாக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவரை குறி வைத்து மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனையெல்லாம், கருத்தில் கொள்ளாமல் தனது பணியினை அவர் மேற்கொண்டு வருகிறார். இனி, தமிழகத்தின் எதிர்க்காலம் அண்ணாமலையாக தான் இருக்க வேண்டும் என பலர் தங்களது விருப்பத்தினை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், பிரபல யூடியூபர் ராஜவேல் நாகராஜன் கூறியிருப்பதாவது; அண்ணாமலையை தவிர்த்து விட்டு இனி அரசியல் செய்ய முடியாது. அந்த இடத்தை விட்டுக் கொடுக்க, அவர் தயாராக இல்லை. இனி, அவரோடு இணைந்தோ அல்லது அவரை எதிர்த்தோ தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை கடந்த, ஒரு வருடத்திற்குள் அவர் உருவாக்கி விட்டார். நீங்கள் அவரை விமர்சனம் செய்யலாம். கிண்டல் செய்யலாம். மக்கள் அவரை எப்படி? பார்க்கிறார்கள், என்னவாக பார்க்க விரும்புகிறார்கள் என்பதை காலம் சொல்லும் என பேசு தமிழா பேசு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருக்கிறார். அதன் லிங்க் இதோ.