நிலுவைத்தொகை கேட்ட அண்ணாமலை… சவால் விட்ட கே.எஸ்.அழகிரி: பா.ஜ.க.வினர் பதிலடி!

நிலுவைத்தொகை கேட்ட அண்ணாமலை… சவால் விட்ட கே.எஸ்.அழகிரி: பா.ஜ.க.வினர் பதிலடி!

Share it if you like it

மகளிர் உரிமைத்தொகையை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி இருந்த நிலையில், பாரத பிரதமர் மோடி தருவதாகச் சொன்ன 15 லட்சம் ரூபாயை வாங்கித் தந்தலா தருவதாக கே.எஸ்.அழகிரி சவால் விட, சமூக வலைத்தளங்கள் பரபரப்புக்கு உல்ளாகி இருக்கிறது.

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மோடி, இந்தியர்களின் கருப்புப் பணம் வெளிநாடுகளில் குவிந்து கிடக்கிறது. இப்பணத்தை மீட்டு வந்தால் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் ரூபாய் வரை கொடுக்க முடியும் என்று கூறினார். ஆனால், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நான் பிரதமரானால் வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று சொன்னதாக ஒரு கட்டுக்கதையை திரித்து விட்டார்கள்.

மேலும், இத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமரான நிலையில், 15 லட்சம் போடும்படி வலியுறுத்தினார்கள். அந்த சமயத்தில், பல்வேறு மீடியாக்களும், பத்திரிகையாளர்களும் மோடி பேசியதை ஒளிபரப்பி, 15 தருவதாக மோடி சொல்லவில்லை. தரும் அளவுக்கு கருப்புப் பணம் இருக்கிறது என்றுதான் கூறினார் என்று தெளிவுபடுத்தின. எனினும், இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின்போதும், 15 லட்சத்தை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கின்றன.

இந்த நிலையில், தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை, வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி இது. ஆகவே, மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து வழங்க வேண்டும். ஆகவே, 28 மாத நிலுவைத்தொகையுடன் மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பிரதமர் அறிவித்த 15 லட்சத்தை அண்ணாமலை வாங்கித் தரட்டும். அதன் பிறகு, முதல்வரிடம் பேசி மகளிர் உரிமைத்தொகையை 28 மாத நிலுவைத்தொகையுடன் வாங்கித் தருகிறேன். இது எனக்கும் அண்ணாமலைக்கும் சவாக இருக்கட்டும் என்று கூறினார். இதுதான் தற்போது மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே மோடி பேசிய வீடியோ காட்சிகளை மீண்டும் எடுத்துப் போட்டு, மோடி அப்படிச் சொல்லவே இல்லை என்று பா.ஜ.க.வினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

blank


Share it if you like it