அண்ணாமலைக்கு தி.மு.க ஆதரவு ஊடகவியலாளர் செந்தில் கண்டனம்.
தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் இவர் என்று பலரால் அழைக்கப்படும் நெறியாளர் செந்தில் அவர்கள் தமிழக பா.ஜ.க தலைவருக்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அண்ணாமலை ஒருதலை பட்சமாக இன்று வரை செயல்படும் சன் டிவி ஊடகவியலாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து இருந்தார்.
கொலை, கொள்ளை, திருட்டு என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் ஆகி வருவதை குறித்து செய்திகளை வெளியிடாமல், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது, நேர்மையான ஆட்சி நடைபெறுகிறது, முதல்வர் உடற்பயிற்சி செய்தார், மக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். டீ குடித்தார் என்று மக்களுக்கு துளியும் பயன்படாத செய்திகளை வெளியிடுவது.
பாரதப் பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, யோகி ஆதித்யநாத், பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பற்றி ஏதேனும் ஒரு மாயதோற்றத்தை உருவாக்கி தமிழக மக்களுக்கு பா.ஜ.க மீது வெறுப்பு ஏற்படும் வண்ணம் சன் டிவி, கலைஞர் டிவி மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதை கண்டித்து தனது கடும் எதிர்ப்பினை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிவு செய்து இருந்தார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆதரவு பெற்ற முன்களபணியாளர்களின் தவறை சுட்டிக்காட்டி பேசிய அண்ணாமலைக்கு பாராட்டினை தெரிவிக்காமல். தனது கடும் எதிர்ப்பினை காட்டி இருப்பதன் மூலம் நெறியாளரின் உண்மையான சுயரூபம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. தி.மு.க மூத்த தலைவரும் எம்பியுமான ஆர்.எஸ் பாரதி பத்திரிக்கையாளர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த பொழுது சீப்பு செந்தில் எங்கே? சென்றார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.