மிகச் சிறந்த ஆளுமையின்கீழ்  இந்தியா: ஆர்.என்.ரவி பெருமிதம்!

மிகச் சிறந்த ஆளுமையின்கீழ் இந்தியா: ஆர்.என்.ரவி பெருமிதம்!

Share it if you like it

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ‘டைனமிக் இந்தியன் ஆப் தி மில்லேனியம்’, ‘பர்சனாலிட்டி ஆப் த டிகேட்’ விருதுகள் வழங்கும் விழா கோவை சரவணம்பட்டியிலுள்ள கே.ஜி. குழும வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் இவ்வாறு பேசினார் ;

விருது பெறும் மருத்துவர்கள், அச்சு ஊடகத்துறையினர், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைவரும் அவர்கள் சார்ந்து இருக்க கூடிய துறையில் சமுதாயத்துக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். நவீன இந்தியா உருவாகுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களை கவுரவிப்பதால் எதிர்காலத்தில் மேலும் பலர் அவர்களின் வழியை பின்பற்றி நடப்பார்கள்.

மிகச்சிறந்த ஆளுமையின்கீழ் இந்தியா கடந்த பத்தாண்டுகளில் அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்துள்ள புரட்சி மக்களுக்கு மிகுந்த பயனைத் தருகிறது.

உலகின் மையமாக இந்தியா திகழ்கிறது. உலகளவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய தகுதியை கொண்டு விளங்குகிறது. பெண்கள் அதிகாரமளித்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

சமூக நீதியைப் பற்றி பேசி வரும் நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்தது, பஞ்சாயத்து கூட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போதும் உரிய மரியாதை அளிக்கப்படாதது, தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களில் 93 சதவீத குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர் என்பன உள்ளிட்ட செய்திகள் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றன.

ஜாதி, மத, இன பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா திகழும். இவ்வாறு அவர் பேசினார்.


Share it if you like it