ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரயில்வே அமைச்சரின் கடமையை உணர்வை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோர ரயில் விபத்து ஏற்பட்டது. இதில், 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர ரயில் விபத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருக்க கூடும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் முழுமையான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த, பணிகள் முழுமையாக நடைபெற்று முடியும் வரையில் ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். இவரது, அயராத உழைப்பினை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும், விவரங்களுக்கு தினமலர் நியூஸ் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.