போராட்டம் வாபஸ்… எதிர்க்கட்சிகளை நோஸ்கட் செய்த  சாக்க்ஷி மாலிக்!

போராட்டம் வாபஸ்… எதிர்க்கட்சிகளை நோஸ்கட் செய்த சாக்க்ஷி மாலிக்!

Share it if you like it

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான சாக்சி மாலிக் தனது நிலைப்பாட்டினை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமாக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண்சிங். இவர், மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டினை சுமத்தி இருந்தனர். இதையடுத்து, பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர். இந்த போராட்டத்தை, எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தி கொள்ள முயன்றனர். இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு நேரடியாக களத்தில் இறங்கியது. இதையடுத்து, போராட்டத்தை கைவிடுவாதக சாக்சி மாலிக் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். சாக்சி மாலிக்கின் வாபஸ் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it