பா.ஜ.க.வின் துணை இல்லாமல் தி.மு.க.வை வெல்வது கடினம் என்று அ.தி.மு.க.வுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க.வுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமில்லாமல், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் கூட பா.ஜ.க.வை நோக்கி நகரத் துவங்கியுள்ளனர். இதனால், அக்கட்சி மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்கை பெற்று வருகிறது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவை உள்ளாட்சித் தேர்தலில் தனித் தனியே களம் காண்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகியவை தனித் தனியே களம் காண்கின்றன. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த சூழலில்தான், தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பா.ஜ.க.வின் துணை இல்லாமல் அதி.மு.க.வால் ஆளும் கட்சியை வெல்ல முடியாது என்று அறிவுரை வழங்கி இருக்கிறார் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. அது குறித்த லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.