Share it if you like it
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு ஏற்றதில் இருந்து. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும். தங்களது தொகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் இன்னும் பிற உதவிகள் கிடைக்கவும். மிக தீவிரமாக களப்பணியினை இன்று வரை பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் செய்து வருகின்றனர்.
தமது தொகுதி மக்களுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் செய்து வரும் உதவிகள் பற்றி தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் அப்பதிவுகளை காண்போம்..
- மொடக்குறிச்சி பா.ஜ.க MLA சி.கே. சரஸ்வதி. கொரோனா தொற்றை ஒழிக்கும் விதமாக. தனது தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் மூலிகை ஆவி பிடிக்கும் முகாமை அண்மையில் துவக்கி வைத்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
- நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி., கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் இருவரும் இணைந்து. இஸ்ரோ மகேந்திரகிரி இயக்குனர் திரு.K.அழகுவேலுடன் கலந்துரையாடி. கன்னியாகுமரி மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கலை மேம்படுத்துமாறு குறிப்பிட்டு உள்ளார்.
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான உதவிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்தேன் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
- திருநெல்வேலி அரசு மருத்துவமனை மற்றும் தென் மாவட்டங்களில் பற்றாக்குறையின்றி ஆக்ஸிஜன் கிடைக்க பெற கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்வளாகத்தில் உற்பத்தியை துவங்குவது குறித்து இன்று சார் ஆட்சியர் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் குழுவினருடன் ஆலோசித்தேன் என்று திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ நைனார் நாகேந்திரன் குறிப்பிட்டு உள்ளார்.
Share it if you like it