பாஜகவின் தார்மீக கடமையான இந்து சனாதான தர்ம பாதுகாப்பு – தமிழக பாஜக தலைவர் முன் நிற்கும் அடுத்த சவால்

பாஜகவின் தார்மீக கடமையான இந்து சனாதான தர்ம பாதுகாப்பு – தமிழக பாஜக தலைவர் முன் நிற்கும் அடுத்த சவால்

Share it if you like it

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே திமுக – விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து இந்து சனாதன எதிர்ப்பு அழிப்பு என்ற பெயரில் மாநாடுகள் – கருத்தரங்கங்கள் விவாத மேடைகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது . இதில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டு வெளிப்படையாக இந்து விரோத கருத்துக்களை பேசியும் எழுதியும் வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள சிறுபான்மை அமைப்புகள் – கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் திமுக உள்ளிட்ட கட்சியினரும் அதன் கூட்டணி கட்சியினரும் சிறுபான்மை மேடைகளில் தொடர்ச்சியாக இந்துக்களை அவமதிக்கும் விதமாக பேசுவதும் வரலாற்று திரிபுகளை பேசி இந்துக்கள் அல்லாதவர் இடத்தில் இந்துக்கள் மீதான வெறுப்பை கசப்புணர்வை வளர்க்கும் வகையிலான விஷம பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்.

ஒருபுறம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றின் பாடப் புத்தகங்கள் அதன் முடிவேடுக்கும் அதிகாரம் எல்லாம் இந்திய விரோதிகளின் கைகளில் போனதால் உண்மையான வரலாறுகள் இந்த தேசத்தின் தேசியம் தர்மம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான தேசியவாதிகள் ஆன்மீகவாதிகளின் வரலாறுகள் இங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டது. தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலமாக திராவிட ஆட்சியில் தொடர்ச்சியான இந்து – இந்திய விரோத மனப்பான்மையே கொலோசியதால் ஒரு புறம் இந்து விரோதமும் மறுபுறம் இந்திய தேசிய எதிர்ப்பு மனநிலை இந்த திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது. அந்த வகையில் இங்குள்ள இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலும் சுதந்திர பாரதத்தின் உண்மையான வரலாறு தெரிவிக்கப்படவில்லை என்பதை கசப்பான உண்மை.

கடந்த தலைமுறையினர் வரையிலும் கூட உண்மையான வரலாறுகள் ஓரளவு மட்டுமே தெரிவிக்கப்பட்டது. சுய விருப்பத்தின் பெயரிலும் உண்மையான தேசியவாதிகளின் கடுமையான முயற்சி உழைப்பாலுமே சமகாலத்தில் தான் பல்வேறு வரலாற்று சம்பவங்கள் அதன் உண்மை பின்னணிகள் ஆவணப்படுத்தப்பட்டு மறைக்கப்பட்ட வரலாறுகள் ஓரளவு வெளிக்கொணரப்படுகிறது. அவ்வகையில் சுதந்திர வரலாறு தெரியாத இளைய தலைமுறை உண்மையான போராட்டக்கார வரலாறு தெரியாத கடந்த தலைமுறை என்று இரண்டிற்கும் இடையில் திட்டமிட்ட தங்களின் வரலாற்று திரிபுகள் விஷம பிரச்சாரங்கள் மூலம் இந்து இந்திய விரோதிகள் அவர்களது போய் கருத்துக்களை பரப்புகிறார்கள். அதன்மூலம் இந்து சனாதனத்தில் இல்லாத சாதிய பாகுபாடுகள் இந்த தேசத்தில் பெரும்பான்மை மக்களிடம் இல்லாத மத பாகுபாடுகள் உள்ளிட்டவற்றை வெறுப்பு பிரச்சாரமாக முன்னெடுத்து பெரும் சாதிய – மத மோதலுக்கு சதி செய்கிறார்கள்.

உண்மையில் வரலாற்றுப் பின்னணி அறியாதவர்கள் ஹிந்தி என்ற தேசிய இணைப்பு மொழியை அறியாத காரணத்தால் தமிழகத்திற்கு வெளியே இருக்கும் உண்மை நிலையை தெரிந்து கொள்ள இயலாதவர்கள். இங்குள்ள உண்மையான நிலையை தமிழகத்திற்கு வெளியே கொண்டு சேர்க்க முடியாதவர்கள் என்று பல தரப்பினரும் இந்த விஷம பிரச்சாரத்தால் ஏதோ ஒரு வகையில் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகிறார்கள் . அந்த வகையில் கண்முன்னே திரும்பிய பக்கமெல்லாம் இந்து விரோதமும் இந்திய விரோதமும் கட்சிகள் – அமைப்புகள் – தனிநபர்கள் என்று புற்றீசல் போல கிளம்பும் நபர்களால் முன்னெடுக்கப்படுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக ஆண்ட கட்சிகள் – ஆளும் கட்சிகள் என்று அனைவரும் போட்டி போட்டு இந்த விஷயத்தில் அவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கிறார்கள்.

ஆனால் இந்த மண்ணில் சாதி – மத – இனம் என்ற அடையாளங்களைக் கடந்து யுக யுகமாக பாரதத்தில் முன்னெடுக்கப்படும் தர்மம் பாரதத்தின் தேசிய மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டு மரியாதை செய்து வாழ வேண்டும். இந்த வரையறைக்குள் வாழும் தேசிய இறையாண்மை தெய்வீக மாண்பை மதித்து நடக்கும் சமூகப் பொறுப்பை அனைவருக்குள்ளும் வளர்க்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்படும் அமைப்புகளும் – கட்சிகளும் இங்கு காவி சாயம் பூசப்பட்டு மத பயங்கரவாத அமைப்புகளாகவும் சிறுபான்மை விரோத கட்சி – அமைப்புகளாகவும் எதிர்மறையில் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இதையெல்லாம் சாதி – மத – மொழியின் பெயரில் செய்யும் கட்சிகளும் – அமைப்புகளும் ஜனநாயகம் – கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இங்கு உள்ள கட்சிகள் போட்டி போட்டு அவர்களை ஆதரித்து வளர்த்தெடுக்கிறார்கள்.

நேரடி நடவடிக்கை என்ற அறிவிப்பின் மூலம் பல லட்சம் மக்களை மதத்தின் பெயரால் கொன்று குவித்தவர்களை அதற்கு காரணமான கட்சி அரசியல் அமைப்புகள் சார்ந்த தலைவர்களை சிறுபான்மை பாதுகாவலர்களாக குறிப்பிடுபவர்கள் தான் அந்த மத பயங்கரவாதத்தை கண்டித்து மீண்டும் அது போல் ஒரு துயரம் வராமல் இங்குள்ள மக்களை மண்ணை பாதுகாக்க வேண்டும் என்று போராடுபவர்களுக்கு மத பயங்கரவாதிகள் என்ற அடைமொழியை கொடுக்கிறார்கள். தன்மானம் சுய கௌரவம் தங்களின் மதம் சார்ந்த வாழ்வியல் உரிமை எல்லாம் எல்லா மதத்திற்கும் மக்களுக்கும் பொருந்தும் என்றால் அது தொடர்ந்து இந்து மக்களுக்கும் இங்குள்ள பெரும்பான்மை சமூகத்திற்கும் கட்சி அரசியல் களத்தில் மறுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் ஏன்.?

நாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் எங்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று கேட்பது ஒரு சாராருக்கு சரி என்றால் அதுவே மறுசாராருக்கு தவறாவது என் மறுக்கப்படுவது ஏன்? இந்த வரலாற்று உண்மைகளை மக்கள் முன் எடுத்து வைத்து வரலாற்றின் படிப்பினைகளை உணர்ந்து நடக்காவிட்டால் அதே வரலாற்றின் துயரங்கள் மீண்டும் நம் முன் தோன்றும் என்ற படிப்பினையை கொடுப்பவர்களை ஒரு குறிப்பிட்ட சாராருக்கான அடையாளமாகவும் பல சாராருக்கு எதிரான பிம்பமாகவும் கட்டமைக்கும் முயற்சி எவ்வளவு பெரிய வன்ம பிரச்சாரம் ? இதை ஜனநாயகம் – கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் – கட்சிகள் முதல் ஊடகங்கள் வரை செய்வது எப்பேர்பட்ட தேச விரோதம்?

வரலாற்றின் ஆக்கிரமிப்புகளை கூட தங்களது ஆட்சி அதிகாரம் கொண்டு மீட்டெடுக்காமல் சட்டத்தின் வழியில் அரை நூற்றாண்டு கால சட்டப் போராட்டம் நடத்தி மீட்பவர்களை மத பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்துவது மதத்தின் பெயரால் வன்முறைகள் தீவிரவாதிகள் கலவரங்களை உருவாக்குவதும் அதை ஆதரிப்பதும் செய்பவர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக ஆதரிப்பதும் எப்படிப்பட்ட மக்கள் விரோதம்? ஆனால் இதை செய்பவர்கள் தான் தங்களை சிறுபான்மை நல பாதுகாப்பாளர்கள் என்றும் நடுநிலையாளர்கள் மதசார்பற்றவர்கள் என்று தங்களுக்கு தாங்களே சான்றிதழ் வழங்கி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறார்கள்.

தமிழகத்தில் சாதியின் பெயரால் எத்தனையோ கட்சிகள் இருக்கிறது . மதத்தின் பெயரால் எத்தனையோ கட்சிகள் அமைப்புகள் இருக்கிறது அதில் யாருக்கும் எந்த பிரச்சனை இல்லை . இந்து மக்களின் பாதுகாப்பிற்கென்று அவர்களை ஒருங்கிணைத்து வழி நடத்துவதற்கு என்று கட்சிகள் அமைப்புகள் வரும்போது எதிர்ப்புகள் எழுவது ஏன் ? அரசியல் சட்டம் ஜனநாயகம் எல்லோருக்கும் பொது என்றால் அது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்? என்ற கேள்வியை இதுவரையில் எந்த ஒரு அரசியல்வாதியும் ஊடகங்களும் எழுப்பியது இல்லை . அந்த வகையில் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு ஆதரவாகவும் எதிராகவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள்.

இதை சாதி – மதம் – அரசியல் என்ற நிலைகளுக்கு அப்பாற்பட்டு யுகம் யுகமாக இந்த மண்ணில் இருக்கும் வாழ்வியல் காலம் காலமாக மக்கள் நடைமுறையில் இருக்கும் சனாதன தர்ம நெறிமுறைகள் அந்த வகையில் இந்த மண்ணின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரிய ஆன்மீக பொக்கிஷங்கள் அவைகளை பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பும் கடமையும் இந்த மண்ணின் தர்மத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சித்தாந்தங்களில் உருவான பாரதிய ஜனதா கட்சிக்கு முழுமையாக இருக்கிறது. அது அவர்களின் முதல் கடமையாகிறது என்பதை தேசிய பாஜக தலைமை உணர்ந்து தமிழக பாஜக தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழகத்தின் திரும்பிய பக்கமெல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு – பாசிச எதிர்ப்பு – மோடி எதிர்ப்பு என்ற பெயரில் இந்து விரோதமும் இந்திய விரோதமும் தலைவிரித்தாடுவதை கண்முன்னே பார்த்த பிறகும் தமிழக பாஜக தலைவர் மௌனம் காப்பது ஏற்புடையது அல்ல. எப்படி பிரிவினைவாதிகள் மத பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் தோல் உரித்து காட்டுவதற்கு ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக அவர் பிரயத்தனம் செய்து தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்து அதன்மூலம் தேசிய பாதுகாப்பு உறுதி செய்தாரோ? அதே வழியில் தமிழகத்தில் இருக்கும் ஹிந்து தர்மம் ஆலயங்கள் இந்து மக்களின் வாழ்வியல் மீதான தொடர் அச்சுறுத்தலையும் அதே வழியில் எதிர்கொண்டு சனாதன எதிர்ப்பு மாநாடு ஒழிப்பு மாநாடு நடத்தும் இந்து விரோதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். இங்குள்ள மக்களுக்கு தங்களை தங்களின் தர்மத்தை பாதுகாக்க ஒரு கட்சி இருக்கிறது. ஒரு தலைவர் இருக்கிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை நிலை நிறுத்த வேண்டும் .

இங்குள்ள பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பாதுகாக்கவும் இந்து விரோதிகளுக்கு பாடம் புகட்டவும் தமிழகத்தில் இந்து சனாதன தர்ம பாதுகாப்பு மாநாடு முன்னெடுக்கப்பட வேண்டும். அதை தேசிய தமிழக பாஜகவின் மூலம் தேசிய பாஜக சர்வதேச அளவில் இந்து சனாதான தர்ம பாதுகாப்பு மாநாடாக முன்னெடுக்க வேண்டும். அவசர அவசியம் கருதி தமிழக பாஜக தலைவர் தேசிய பாஜக தலைமைக்கு இந்து சனாதான தர்ம பாதுகாப்பு மாநாட்டின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். அதன் மூலம் பிரபஞ்சத்தின் மானுட வாழ்வியலாக இருந்த தர்மத்தையும் இன்றளவும் பெரும்பான்மை மக்கள் பின்பற்றி வாழும் தர்மத்தையும் பாதுகாக்க பாஜக முன்வர வேண்டும். அவர்களின் மூலமே இந்த சனாதன எதிர்ப்பு ஒழிப்பு கோஷ்டிகளின் உண்மை முகத்தை தோலுரிக்க முடியும். அவர்களின் இந்து விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அந்த வகையில் இங்குள்ள மக்களின் நம்பிக்கை வாழ்வியலை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் முதல் கடமை . அந்த வகையில் இங்கு நடக்கும் இந்து விரோத அநீதிகளை தமிழக ஆளுநரும் மத்திய அரசின் நேரடி பார்வைக்கும் கண்காணிப்பிற்கும் கொண்டு போய் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்தில் இந்து தர்மத்தின் மீதான இந்து மக்கள் மீதான அச்சுறுத்தல்கள் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த மண்ணின் காலம் காலமாக பாரம்பரிய வழியில் வாழும் மக்களும் அவர்களின் ஆன்மீக பொக்கிஷமான ஆலயங்களும் இந்து விரோதிகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்து மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு . இங்குள்ள ஒவ்வொரு தேசியவாதி ஆன்மீகவாதியின் வேண்டுகோள்.


Share it if you like it