தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பு, மத்திய அரசை தொடர்ந்து ‘ஒன்றிய அரசு’ என்று அழைத்து வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான பேராசிரியர் சீனிவாசன். பிரிவினையை தூண்டும் விதமாக பேசி வரும் நபர்களுக்கும், கட்சிகளுக்கும் தக்க பதிலடி கொடுத்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீட் தேர்வை முதல் சட்டமன்ற, கூட்ட தொடரில் ரத்து செய்வோம். பெட்ரோலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவோம், மகளிருக்கு ஆயிரம் ரூபாய், வழங்குவோம். என தமிழக மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை, கொடுத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க. ஆனால், இன்று தாங்கள் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது ஸ்டாலின் அரசு. எனவே, மக்களின் கவனத்தை திசை திருப்பும், விதமாக பல்வேறு கபடநாடகங்களை இன்று வரை அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என்று பிரிவினையை தூண்டும் விதமாக, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள், மேடைகள் தோறும் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய பட்ஜெட் குறித்து பொதிகை ஊடகத்தில் விவாதம் ஒன்று நடைபெற்றது. இதில், பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் ஆர்.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் தொடர்ந்து பேசுகையில், மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என்று பேசி வரும் கட்சிகளுக்கும், நபர்களுக்கும் சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக பதில் அளித்துள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.