பா.ஜ.க குறித்து அவதூறு, வெறுப்பு பிரச்சாரம் செய்த சீமான், சுந்தரவள்ளி மற்றும் தி.மு.க கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கும் சேர்த்தே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சத்தமில்லாமல் மரண பதிலடி கொடுத்து இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பணவெறி, படை பலம், அதிகார திமிர் என அனைத்தையும் பயன்படுத்தி, கடந்த பிப்-19 அன்று உள்ளாட்சி தேர்தலை ஆளும் தி.மு.க அரசு நடத்தியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியே இந்த வெற்றியை ஆளும் கட்சி பதிவு செய்துள்ளதாக பொதுமக்களே கூறும் அவலநிலையை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், ஓட்டிற்கு பணமோ, பரிசு பொருளோ என எதனையும் வழங்காமல் நேர்மையான வேட்பாளர்களை களத்தில் இறக்கி, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்று 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது.
ஆளும் கட்சியின் ஆசி பெற்ற பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி என அனைத்து கட்சிகளின் மிக கடுமையான விமர்சனங்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை தாண்டி மக்களின் நம்பிக்கையை பெற்று தனது தடத்தை பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க பதிவு செய்துள்ளது. மோடிஜி பிரதமராக வரவே முடியாதுன்னு சொன்னீங்க 2014 ல ஆனோம் 2019 ல ஆனோம்… அண்ணாமலை ஆவேசம்… ஏதே அண்ணாமலை ஆவேசமா…. நீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் தமிழ்நாட்டுக்குள்ள தனியா நின்னு ஒரு வார்ட் மெம்பரா கூட வர முடியாது சீமான் பாராட்டிய அருணின் நெருங்கிய நண்பர் சுந்தரவள்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். தேர்தல் களத்தில் தனியாக நின்று என்னை விட கூடுதலாக வாக்கு பெற முடியுமா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், ஆளும் கட்சி மட்டும்மில்லாமல், பா.ஜ.க குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு அண்ணாமலை சத்தமில்லாமல் மரண பதிலடி கொடுத்துள்ளார் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.