பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில். உலக புகழ்பெற்ற டபிள்யுடபிள்யுஇ சாம்பியன் தி கிரேட் காலி பா.ஜ.கவில் இணைந்து இருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரேட் காளி, காவல்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். மல்யுத்தத்தின் மீது ஏற்பட்ட தீராத காதல் காரணமாக தான் செய்து வந்த அரசு பணியை உதறி தள்ளி விட்டு அதன்பின், தனது கடும் முயற்சிக்கு கிடைத்த பலனாக 2000ம் ஆண்டில் தொழில்முறை மல்யுதத்தில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து டபிள்யுடபிள்யுஇ போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்து இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.
எதிர்வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆம் ஆத்மி, பஞ்சாப் லோக் காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி களம் காண்கிறது. இந்த நிலையில் தான், உலக புகழ் பெற்ற தி கிரேட் காளி பா.ஜ.க-வில் இணைந்து உள்ளார். டபிள்யுடபிள்யுஇ சாம்பியன் தி கிரேட் காலியின் வருகை பா.ஜ.கவிற்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.