38 வயது உடைய இளைஞர் ஒருவர். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் அமைதியாக பல சேவைகளையும் மக்கள் பணிகளையும் திறம்பட செய்து வருகிறார். அரசியல் ஆர்வம் எப்படி வந்தது என்று அவரிடம் கேட்ட பொழுது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு சினிமாவில் தொடங்கி வீட்டு பட்ஜெட் வரை அனைத்திலும் அரசியல் பின்னிப்பிணைந்துள்ளது. ஆனால் பெருவாரியான மாணவர்களும், இளைஞர்களும், அரசியல் பேசுவதை தவிர்த்து வருவது. இந்நாட்டின் சாபக்கேடு. 20 முதல் 40 வயதிலான இளைஞர்கள் கண்டிப்பாக. அரசியலில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். முடிந்தால் ஆர்வத்தோடு பங்கேற்க வேண்டும். தங்கள் மனதிற்கு ஒத்துப் போகும் தத்துவங்களையும், கொள்கைகளையும், ஏற்கும் ஒரு அரசியல் கட்சியுடன் தங்களை இணைத்து கொண்டு சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும்.
ஒரு ஜனநாயகத்தின் மாபெரும் எழுச்சியாக அமையும். இளைஞர் சக்தியே இந்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் மாபெரும் சக்தியாக அமையும் என்று முழுமையாக உணர்ந்ததால் தான், என்னை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினேன்.’ என்று தன் தெளிவான சிந்தனையை முன் வைக்கிறார் பென்டகன் பாண்டுரங்கன்.
ஜவுளி மற்றும் கட்டடத் தொழிலில் ஜாம்பவானாக திகழும் இவர். பென்டகன் குரூப்ஸ் நிறுவனத்தை கடந்த 10 ஆண்டு காலமாக திறம்பட செயல்படுத்தி வருகிறார். மேலும் விருதுநகரில் 6 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
பல்வேறு துறையில் சாதனை புரிந்த இளைஞர்கள். தேசிய நீரோட்டத்தில் – பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றவே விரும்புகின்றனர். அரவக்குறிச்சியின் வெற்றி வேட்பாளர் அண்ணாமலை அவர்கள் பின்னால் இன்று ஒட்டு மொத்த இளைஞர்களும் இணைவது அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர் நோக்குகிறார்கள் என்பதை திண்ணமாக நமக்கு உணர்த்துகிறது.
இளைஞர்கள் ‘அரசியல் பற்றி பேசினால். அது ஒரு தீட்டு’ என்று அவர்களின் மனதில் தி.மு.க அரசியல் ஆர்வம் அற்றவர்களாக மாற்ற இன்று வரை முயன்று வருகின்றனர். இந்த தேர்தலில் தி.மு.க அடையும் தோல்வி., இளைஞர்களின் மனதில் பா.ஜ.க தான் தமிழகத்தின் மாற்று சக்தி என்கின்ற, புதிய நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கும் என்பது உறுதி.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழகத்தில் சாதித்து வருவது போல். தொழில் துறையில் சாதித்து வரும் பென்டகன் பாண்டுரங்கனை பா.ஜ.க விருதுநகரில் களம் இறக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.