பா.ஜ.க.விற்கு மாஸ் ஆதரவு தந்த முஸ்லீம்கள்!

பா.ஜ.க.விற்கு மாஸ் ஆதரவு தந்த முஸ்லீம்கள்!

Share it if you like it

உ.பி.யில் நடைபெற்ற உள்ளாட்சி சேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று இருப்பது நாடு ழுழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில, முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அதனை பொய்யாக்கும் விதமாக, உ.பி. பா.ஜ.க. சிறுபான்மையினர் பிரிவு தலைவர் குன்வர் பாசித் அலியின் பேட்டி அமைந்துள்ளது.

இதுகுறித்து, அவர் கூறும்போது, “கடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் 40.73 ஆக இருந்தது. இது தற்போது 47.54 சதவீதமாக அதிகரித்தமைக்கு முஸ்லிம் வாக்குகள்தான் காரணம். இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இது, உ.பி.யில் சுமார் 24 சதவீதம் உள்ள முஸ்லிம்கள் பா.ஜ.க பக்கம் சாயத் தொடங்கி இருப்பதை காட்டுகிறது.

கடந்த முறை வெறும் 57 முஸ்லிம்கள் போட்டியிட வாய்ப்பளித்த பா.ஜ.க. இந்த முறை 395 பேருக்கு வாய்ப்பளித்தது. இவர்களில், சுமார் 60 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட 32 முஸ்லிம்களில் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது பா.ஜ.க.விற்கு கிடைத்த முஸ்லிம் ஆதரவாக நாங்கள் பார்க்கிறோம் என கூறினார்.


Share it if you like it