அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இடத்தில் பா.ஜ.க மற்றும் வி.சி.க.வினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணல் அம்பேக்ரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் அவரின் புகைப்படத்திற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், என பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதுதவிர, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தங்களது பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் வந்துள்ளனர். அப்பொழுது, கட்சி கொடிகள் நடுவதில் ஏற்பட்ட தகராறில் அவ்விரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த, செய்தியினை பிரபல ஊடகமான பாலிமர் செய்தியாக வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க பா.ஜ.க.வினர் வந்தனர். அப்பொழுது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருவதாக கூறி இதேபோன்று, பா.ஜ.க.வினர் மீது வி.சி.க.வை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
அண்ணல் அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சொந்தம் என்பது போல, வி.சி.க.வினர் மாலை அணிவிக்க பா.ஜ.க.வினர் வரும்பொழுது எல்லாம் அனுமதி வழங்காமல் தொடர்ந்து இதுபோன்று அடாவடி செய்து வருவது கடும் கண்டனத்திற்குறியது என பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவன், பாலகிருஷ்ணன் மாதிரி “அம்பேத்கரை” வைத்து வியாபாரம் செய்ற கட்சி பா.ஜ.க இல்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், பா.ஜ.க.வினர் மீது வி.சி.க.வை சேர்ந்தவர்கள் இது போன்று தாக்குல்கள் நடத்தி வரும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. ’தலைவன் எவ்வழியோ வி.சி.க.வினரும் அவ்வழியே என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.