பா.ஜ.க. நிர்வாகி கொலை! பின்னணி என்ன?

பா.ஜ.க. நிர்வாகி கொலை! பின்னணி என்ன?

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சிகந்தரா ராவ் சட்டமன்றத் தொகுதி அலிகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா யாதவ். பா.ஜ.க.வின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவில் பொதுச்செயலாளராக இருந்தார். இவர்தான், நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அதாவது, இவரது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து நேற்று காலையில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, கிருஷ்ணா யாதவ், மண்டையில் குண்டு துளைக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். அவரது அருகில் ஒரு கைத்துப்பாக்கியும், காலியான துப்பாக்கி குண்டு ஆகியவை கிடந்திருக்கிறது. அவற்றை கைப்பற்றிய போலீஸார், கிருஷ்ணா யாதவை மீட்டு அலிகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிருஷ்ணா யாதவ் இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. ஆகவே, கிருஷ்ணா யாதவ் தேர்தல் முன்விரோதத்தால் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கர்நாடகாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தளை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷா, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவு பொதுச்செயலாளரும் கொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.


Share it if you like it