உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வேளையில், மீட்பு பணிகளை மேலும் வேகப்படுத்தும் விதமாக நான்கு மத்திய அமைச்சர்களை நேரடியாக களத்திற்கே அனுப்பும் முடிவினை மத்திய அரசு எடுத்துள்ளது.
உக்ரைனில் போர் மேகம் சூழ்ந்த உள்ள நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, பலர் நாடு திரும்பி வரும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என பலர் மத்திய அரசுக்கு தங்களது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும், மத்திய அரசு உடன் இணக்கமாக இருந்து, தமது மாநிலத்தை சேர்ந்தவர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக பல்வேறு நாடகங்களை இன்று வரை அரங்கேற்றி வருகிறார். அந்த வகையில், ஜோதிராதித்யா சிந்தியாவை – ருமேனியா&மோல்டாவாவிற்கும், கிரிண் ரிஜிஜு – ஸ்லோவேக்கியாவிற்கும், ஹர்தீப் சிங் பூரியை – ஹங்கேரி-க்கும், வி.கே.சிங்கை – போலாந்திற்கும் மத்திய அரசு நேரடியாக களத்திற்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.