பிளீச்சிங் பவுடர் போட்டா கொசு சாவாது, மைதாமாவு போட்டா தான் சாவும் – அல்டிமேட் காமெடி !

பிளீச்சிங் பவுடர் போட்டா கொசு சாவாது, மைதாமாவு போட்டா தான் சாவும் – அல்டிமேட் காமெடி !

Share it if you like it

சென்னை, செங்குன்றத்தில் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளை, நாரவாரிக் குப்பம் பேரூராட்சி மேற்கொண்டது. இந்நிலையில் நேற்று காலை, தெருக்களில் தேங்கியிருந்த குப்பை, கழிவுகளை அகற்றி, கிருமிநாசினி ‘பவுடர்’ துாவும் பணியை, துாய்மை பணியாளர்கள் செய்தனர்.
இதனால் கொசுத் தொல்லை குறைந்து பூரான், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தல் இருக்காது என, மக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஆனால் செங்குன்றதத்தில் உள்ள டாக்டர் வைதீஸ்வரன் தெரு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்று வட்டாரங்களில் தூவப்பட்ட பவுடர் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை கையில் எடுத்து பார்த்த போது, எந்த உறுத்தலுமின்றி இருந்தது. அதை முகர்ந்து பார்த்த போது, மைதா மாவின் வாசம் தெரிந்தது.
துாய்மை பணியாளர் கள் கொண்டு வந்த மூட்டையை சோதித்த போது அதில் பிஸ்கட், தயாரிக்க பேக்கரிகளில் ரொட்டி பயன்படுத்தப்படும் மைதா மாவு இருந்தது. அவர்களிடம் விசாரித்த போது, பேரூராட்சி அதிகாரிகள் கொடுத்ததை தான் துாவி வருவதாக கூறினர். ‘பிளீச்சிங்’ பவுடருக்கு மாற்றாக, மைதா மாவு தெளித்த நாரவாரிக் குப்பம் பேரூராட்சியின் காமெடியை, மக்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Share it if you like it