கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய துணை ஜனாதிபதியின் டுவிட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ் முக்கிய தலைவர்கள் பலருக்கு ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இவ்விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து உள்ளது. பலரும் குறைந்தது ஒரு வாரமாவது டுவிட்டரை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்பது போன்ற கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி., யுமான ராகுல் காந்தி மத்திய அரசு டுவிட்டரில் ப்ளூ டிக்குக்காக போராடி கொண்டு இருப்பதாக கிண்டலாக கூறி உள்ளார்.
ஒரு நாட்டின் துணை ஜனாதிபதியின் ப்ளூ டிக் நீக்கம் என்பது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் அவரது பெயரில் போலி கணக்குகளை துவங்க வழி வகுக்கும் மேலும் அது கௌரவ பிரச்சனை என்றும் யோசிக்காமல் மத்திய அரசை குறை சொல்லவேண்டும் என்பதற்காக இது போன்ற விஷயங்களில் கூட பொறுப்பில்லாமல் பேசுவது அழகல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.