‘பதான்’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: திரைக்கு வருவதில் சிக்கல்?!

‘பதான்’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: திரைக்கு வருவதில் சிக்கல்?!

Share it if you like it

பதான் திரைப்படத்தை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும். மேலும், அப்படம் ஓடும் திரையரங்குகளை தீவைத்துக் கொளுத்துங்கள் என்று, அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தைச் சேர்ந்த மதகுரு ராஜு தாஸ் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

பொதுவாகவே, பாலிவுட் படங்களில் ஹிந்து மத துவேசம் அடங்கிய காட்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. குறிப்பாக, கான்கள் நடிக்கும் படங்களில் இக்காட்சிகள் சற்று தூக்கலாகவே இருக்கும். ஹிந்து சாமியார்களை கெட்டவர்களாக காட்டுவது, ஹிந்து தெய்வங்களை அவமதிப்பது, ஹிந்துத்துவா கொள்கையை கேலி கிண்டல் செய்வது என்பன போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதிலும், ஷாருக்கான் படம் என்றால் காவி கலரை அசிங்கப்படுத்தும் வகையிலான காட்சிகள் தவறாமல் இடம்பெறும். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஹீரோயினோ அல்லது ஹீரோவோ ஒரு காட்சியிலாவது காவி கலரில் ஆடை அணிந்து வராமல் இருக்க மாட்டார்கள். இதனால், பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களான கான்கள் மீது ஹிந்துக்கள் கடும் அதிருப்தியிலும், ஆத்திரத்திலும் இருந்து வருகின்றனர். இதன் வெளிப்பாடாக, கான்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது பாய்காட் பாலிவுட் என்றும், குறிப்பிட்ட நடிகர் பெயர் மற்றும் திரைப்படத்தின் பெயர் ஆகியவற்றையும் போட்டு பாய்காட் என்று ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில், அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் லால் சிங் சத்தா திரைப்படம் வெளியானபோதும், மேற்படி ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டாக்கினர். இதனால், அப்படம் படுதோல்வியடைந்தது. இதனால் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி இருக்கிறார் அமீர்கான். இந்த சூழலில்தான், ஷாருக்கான் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் பதான் படத்தில் காவி உடையை கேவலப்படுத்தும் வகையில், ஆபாசமாக உடையணிந்து காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் ‘பதான்’ என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பேஷ்ரம் ரங்’ பாடல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்பாடல் காட்சியில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி ஆடையும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்தவாறு டூயட் பாடுகின்றனர். இக்காட்சி மிகவும் ஆபாசமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்து விட்டுத்தான் ஹிந்துக்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பேசிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, தீபிகா படுகோனே, ஷாருக்கான் அணிந்திருந்த ஆடைகளின் நிறத்தை சுட்டிக்காட்டி “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டிருக்கிறது. பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மத்தியப் பிரதேசத்தில் பதான் படத்தை வெளியிட தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்” என்று கூறியிருக்கிறார். அதேபோல, அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ், “பாலிவுட், ஹாலிவுட் சினிமா துறைகள் தொடர்ந்து சனாதன தர்மத்தை கேலி, கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அதுவும் ஷாருக்கான் தொடர்ந்து சனாதன தர்மத்தை எதிர்க்கிறார். பதான் படத்தில் தீபிகா படுகோனே அணிந்துள்ள பிகினி உடையின் நிறம், ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. காவி நிறத்தில் பிகினி அணிய வேண்டிய அவசியம்தான் என்ன? வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும். இப்படம் எந்தெந்த திரையரங்குகளில் எல்லாம் திரையிடப்படுகிறதோ அவற்றையெல்லாம் தீயிட்டு கொளுத்த வேண்டும். இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கும் இதே தண்டனை தான் தர வேண்டும்” என்று ஆவேசம் காட்டி இருக்கிறார்.

மேலும், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹிந்து அமைப்பினர் சிலர் ‘பதான்’ படத்தை தடை செய்யக் கோரி ஷாருக்கான் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து மஹாசபாவின் தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், “ஷாருக்கானின் பதான் படத்தில் காவியும், ஹிந்து மதமும் அவமதிக்கப்பட்டிருக்கிறது. தணிக்கை வாரியம் தூங்கிக் கொண்டிருந்ததா என்ற கேள்விதான் எழுகிறது. நாங்கள் படத்தை தடை செய்யக் கோருகிறோம். இந்தப் படத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்” என்றார். அதேபோல, பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி. சாத்வி பிரக்யா சிங் கூறுகையில், “காவி நிறத்தை தவறாக சித்தரித்துள்ள பதான் திரைப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது. அவர்களின் எந்த படத்தையுமே பார்க்க வேண்டாம். அவர்களை சீக்கிரமே நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். அந்த காவி உடை காட்சிகளை மாற்றவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். காவி நிறம் என்பது நம் நாட்டின் பெருமை. தேசியக் கொடியிலும் காவி வண்ணம் உள்ளது. அதை அவமதிக்கும் செயல்களை அனுமதிக்க மாட்டோம். காவி நிறத்தை யார் அவமதித்தாலும் சட்ட நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடத்தப்படும்” என்று கூறியிருக்கிறார்.

ஆக மொத்தத்தில், பதான் படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்துக் கொண்டே வருகிறது. ஆகவே, படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.


Share it if you like it