பள்ளி மாணவனின் தவறை துணிச்சலாக தட்டிக்கேட்ட பெண்மணிக்கு குவியும் பாராட்டு..!

பள்ளி மாணவனின் தவறை துணிச்சலாக தட்டிக்கேட்ட பெண்மணிக்கு குவியும் பாராட்டு..!

Share it if you like it

பள்ளி மாணவன் ஒருவன் புகைப்பிடித்தை கண்டித்த பெண்மணிக்கு குவியும் பாராட்டு.

வயது வித்தியாசமின்றி குழந்தைகள், பெண்கள், ஆண்கள், என பலர் மதுபழக்கத்திற்கு அடிமையாகும் சூழல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒருபுறம் என்றால் பள்ளி, கல்லூரி, சென்று வரும் தனது பிள்ளைகளின் பழக்க, வழக்கங்கள், எதிர்காலம் எப்படி? இருக்கும் என்று அச்சப்படும் நிலைமையே தற்பொழுது தமிழகத்தில் நிலவி வருகிறது.

இந்த நிலையில் பள்ளி மாணவன் ஒருவன் சிகரெட் பிடித்ததை பார்த்த பெண்மணி ஒருவர், தனக்கு என்ன அது பற்றி கவலை என்று பாராமல் மாணவனின் எதிர்காலம் வீணாகி விட கூடாது என்பதற்காக அந்த மாணவனின் தவறை மிகவும் துணிச்சலாக கண்டித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த காணொளியை பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்ததக்கது.


Share it if you like it