பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற காலம் முதல் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கடுமையான சீர்திருத்தங்கள் பாரபட்சம் இன்றி நிதிநிலை நிர்வாகம் தயவு தாட்சண்யம் இல்லாத சட்டம் ஒழுங்கு இவற்றின் மூலம் மட்டுமே தற்போதைய பிரிட்டன் நிலமையை சீரமைக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கு ஏதுவாக நல்லெண்ணம் நட்புறவோடு பல நாடுகளையும் அவர் ஒருங்கிணைத்து போகிறார். ஆனால் அதையும் மீறி கடுமையான உள்நாட்டு நிதி நெருக்கடிகள் காரணமாக வங்கிகளும் உள்ளூர் நகர நிர்வாகங்களும் திவால் நிலையை நோக்கி நகர்வது பிரட்டனில் தொடர்கிறது.
முதல் அறிவிப்பாக பிரிட்டனின் பாரம்பரியமான இரண்டாம் பெரிய மாநகராட்சி நிர்வாகமான பர்மிங்ஹாம் மாநகராட்சி கடுமையான நிதி நெருக்கடியால் திவால் ஆகிறது. மாநகராட்சியில் தொட்டதற்கெல்லாம் இழப்பீடு – சலுகைகள் என்று அரசாங்கத்தின் பணத்தை வாரி வழங்கி கஜானாவை காலி செய்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கடந்த கால நிதிநிலை நிர்வாகத்தின் வெளிப்பாடுதான் இன்றைய நிலையில் மாநகராட்சியில் குப்பை அல்லது கூட பணம் இல்லை என்ற நிலையில் பர்ஹிமாம் மாநகராட்சி வெற்று அடையாளத்துடன் வெறும் கையுடன் நிற்கிறது.
கடந்த காலங்களில் பாரதத்திற்கு சுற்றுப்பயணம் வந்த பிரிட்டனின் ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஜெனரல் டயர் என்பவனின் மூலமாக நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்க கூட அந்த இடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மௌன அஞ்சலி செலுத்திவிட்டு அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று வார்த்தைகளை உதித்தவர்கள தவிர பெயரளவில் கூட பாரதத்திடமோ அதன் மக்களிடமோ பிரிட்டன் மன்னிப்பு கேட்கிறது என்று உதட்டளவில் கூட அவர்கள் வார்த்தைகளை உதிர்க்க தயாராக இருந்ததில்லை. ஆனால் இன்று அதே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பாரதத்திடம் இருந்து கொள்ளையடித்து போன பொக்கிஷங்களை திருப்பித் தர தயாராகிறது எனில் பாரதத்தை பகைத்துக் கொண்டால் பிரிட்டனுக்கு வாழ்வில்லை என்பதையும் உலகின் எந்த ஒரு நாடும் பகைத்துக் கொள்ள தயாராக இல்லாத அளவில் பாரதம் வளர்ந்து நிற்கிறது என்பதும் புலன் ஆகிறது.
கடந்த காலங்களில் பாரத பிரதமர் பல்வேறு நேர்காணல்கள் விவாதங்களில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வந்தார். பாரதத்தில் காங்கிரஸ் சரியும்போது பயங்கரவாதம் சரியும். பயங்கரவாதம் சரியும் போது பாகிஸ்தான் சரியும். பாகிஸ்தான் சரியும்போது உள்நாட்டில் பயங்கரவாதமும் காங்கிரசும் ஒன்றாக சேர்ந்து இந்த தேசத்தை எதிர்க்கும். அந்த நிலை வரும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு பேசியிருந்தார். அவர் சொல்லி வைத்தார் போல பண மதிப்பிழப்பு நடவடிக்கைப் பிறகு உள்நாட்டில் பயங்கரவாதம் சரிந்தது . அதன் மூலம் பாகிஸ்தான் திவாலான நிலைக்கு வந்தது. இந்த இரண்டையும் பார்த்த காங்கிரஸ் பதறியது. அதற்கு காரணமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் அதை முன்னெடுத்த மோடி அரசையும் இன்றளவும் கடுமையாக எதிர்த்து வருகிறது. இதை ஒரு நுனியாக வைத்துக் கொள்வோம்.
இதே பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக இந்திய ரூபாய் நோட்டுக்களை கள்ளத்தனமாக அச்சிட்டு அதன் மூலம் வயிறு வளர்த்து வந்த வங்கதேசம் – மியான்மர் – இலங்கை உள்ளிட்ட பல்வேறு அண்டை நாடுகளும் பெரும் சிக்கலை எதிர்கொண்டது. குறிப்பாக வங்கதேசமும் மியான்மரும் ஓரளவு சுதாரிக்கும் நிலையில் இருந்தாலும் இலங்கை மீண்டு வர முடியாத நிலையில் திவால் ஆனது. இன்றைய நிலையில் உதவி இல்லை எனில் இலங்கைக்கு அடுத்த வேலைக்கு உணவு இல்லை என்பதே எதார்த்த உண்மை. இதே வரிசையில் எங்கோ இருக்கும் பிரிட்டனும் கடுமையான சரிவுகளையும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடிகளையும் கடந்து திவால் தவிர்க்க முடியாது என்ற நிலையில் நிற்கிறது இதை மறு நுனியாக வைத்துக் கொள்வோம்.
பிரிட்டன் சரியத் தொடங்கி இருப்பது அதன் முழுமையான பொருளாதார கொள்கைகள் நிதிநிலை மேலாண்மை காரணமாகத்தான் என்றால் அதை அவர்களால் மட்டுமே சரி செய்ய முடியும் . அந்த வகையில் அவர்கள் முழுமையாக தேசத்திற்கு வெளியே நம்பியிருப்பது பாரதத்தை மட்டும் தான் என்ற நிலைப்பாட்டின் மூலம் பாரதத்தின் தற்போதைய ராஜ்ய உறவையும் பொருளாதார பலத்தையும் உலகம் உணர்ந்து கொள்ளலாம். அப்படி என்றால் கடந்த காலங்களில் பாரதத்தின் ஆட்சியாளர்கள் பாரதத்தின் நலனை புறந்தள்ளி பாரதத்தின் எதிரி நாடுகளுக்கான நலனையும் அவர்களின் விருப்பப்படியான ஆட்சி அதிகாரத்தையுமே முன்னெடுத்து இருக்கிறார்கள் என்பது புலன் ஆகிறது. மறுபுறம் சுதந்திர பாரதத்தில் பாரதத்தின் நலனை புறந்தள்ளி தங்களது கை பார்வையாக ஆளும் ஒரு அடிவருடி கும்பலை உருவாக்கி அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துப் போன கடந்த கால பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நயவஞ்சகமும் நிரூபணம் ஆகிறது.
அதனால் தான் சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்ற பெரியண்ணன் மனப்பான்மையோடு உலகையே வளைத்து போட்டு காலனி நாடுகளாக மாற்றி வைத்து அடக்குமுறைகள் அச்சுறுத்தல்கள் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் மனித வளங்கள் அவர்களின் உழைப்பு உற்பத்தி பொருட்களை எல்லாம் சுரண்டிப் போய் பிரிட்டனை வளம் கொழிக்கும் சொர்க்கமாக மாற்றி வைத்திருந்தது. அதன் காரணமாகத்தான் அரசாங்கத்தின் கஜானா நிரம்பி வழிந்தது. குடிமக்களுக்கு பெரும் ஊதியம் நலத்திட்ட பணிகள் வளர்ச்சி திட்டங்கள் தொட்டதற்கெல்லாம் இழப்பீடு நிவாரணம் என்று நிதியை வாரி வழங்க முடிந்தது. பிரிட்டன் குடிமக்களும் சுகவாசிகளாகவே வாழ முடிந்தது.
பிரிட்டனின் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்ததும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதன் சுரண்டல் கொள்கைகளும் அதற்கு துணை போன வெளிநாடுகளின் வெளியுறவு கொள்கைகளும் காலாவதியாகி அந்தந்த நாடுகள் தங்களின் நலனுக்கு முன்னுரிமை தரும் சுயராஜ்யமும் உள்நாட்டு பாதுகாப்பை வளத்தை நிலை நிறுத்தும் வெளியுறவு கொள்கைகளையும் வகுத்த போது பிரிட்டனின் பொருளாதார சுரண்டல் முடிவுக்கு வந்தது. பிரிட்டனின் வருவாயும் நிர்வாகமும் ஒரு தீவிற்குள்ளேயே முடக்கப்பட்ட பிறகு அதன் வருவாயை கொண்டு மட்டுமே வாழ வேண்டும் என்ற நிலையில் பிரிட்டன் தள்ளாடத் தொடங்கியது.
தள்ளாட்டம் தொடங்கிய காலத்திலேயே பிரிட்டன் சுதாரித்து கடுமையான சீர்திருத்தங்கள் நிதிநிலை மேலாண்மை மூலம் தொலைநோக்குப் பார்வையில் நாட்டை வழி நடத்தி இருந்தால் நிச்சயம் என்று பிரிட்டன் இந்த நிலைக்கு வந்திருக்காது. ஆனால் கைவிட்டுப் போன தேசங்களின் பிடிமானங்களை மீண்டும் தங்கள் கைகளுக்கு கொண்டு வருவது எப்படி ? அதற்காக இன்னும் என்னென்ன குழப்பங்களை உருவாக்க முடியும் ? என்று உளவுத்துறையின் மீதும் மேலும் மேலும் கடந்த கால தவறுகளை அது செய்ய துணிந்தது . ஆனால் அதன் போத காலம் அதன் முயற்சிகள் எல்லாம் தோல்விகள் முடிந்து இன்று பிரிட்டன் பரிதவிக்கிறது.
சுதந்திரம் என்ற பெயரில் பாரதத்தில் பல்வேறு குழப்பங்களை உருவாக்கி பாரதத்திற்கு நேர் விரோதியாக பாகிஸ்தானை கட்டமைத்து அதை போஷாக்காக வளர்த்ததும் அந்த பாகிஸ்தானுக்கு பிரிட்டனில் திறந்த வெளி வீடாக்கி சகல சுதந்திரமும் சலுகைகளையும் வழங்கி வந்தது அதன் விளைவு தான் பிரிட்டனில் செல்வம் கொழிக்கும் பெரும் தொழிலதிபர்கள் பன்னாட்டு தொழில் முகவர்கள் எல்லோரும் பாகிஸ்தானை பூர்வீக கொண்ட இஸ்லாமியர்களாகவே இருந்தார்கள் அந்த லாபி தான் பிரிட்டனை பாகிஸ்தான் ஆதரவோடு பாரதத்தின் மீது வன்மம் கொண்ட நிலைப்பாட்டில் தொடர வைத்தது. ஆனால் இன்று அவர்களின் தொழில் பொருளாதார வளங்கள் எல்லாம் திவாலாகி பாகிஸ்தானும் திவால் ஆகி அவர்கள் பல் பிடுங்கிய பாம்பாக நிற்கிறார்கள். ஆனால் தங்களின் கடுமையான உழைப்பு – நேர்மையான பொருளாதாரக் கொள்கைகள் – சிக்கனமான நிதிநிலை மேலாண்மை காரணமாக இந்த நிலையையும் எதிர்கொண்டு நிற்கும் பிரிட்டிஷ் இருக்கும் இந்திய வம்சாவளி தொழில் அதிபர்களும் உற்பத்தி சார்ந்த தொழில் முகவர்களும் இன்றைய தினம் அவர்களையும் காத்து பிரிட்டன் அரசையும் பாதுகாத்து வருகிறார்கள். இனி அவர்கள் ஆதரவு இல்லாமல் பிரிட்டனில் துரும்பை கூட அசைக்க முடியாது என்ற நிலையில் தான் பிரிட்டன் சாம்ராஜ்யம் பாரதத்திடம் முழுமையாக சரணாகதி அடைகிறது.
எப்படி பாரதத்தின் கள்ள நோட்டின் சந்தைகளாக அண்டை நாடுகள் எல்லாம் பாரத பண மதிப்பிழப்பின் மூலம் அம்பலமானதோ ? அதே போல கடந்த கால பாரதத்தை சூழ்ந்திருந்த அச்சுறுத்தல்களும் தற்போது அம்பலமாகிறது. பாரதத்தின் பண மதிப்பிழப்பின் மூலம் உள்நாட்டு பயங்கரவாதம் சரிந்தது. அதன் தொடர்ச்சியாக பகை நாடுகளான பாகிஸ்தான் சரிந்தது. இந்த பயங்கரவாதம் பாகிஸ்தானின் முழு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சி சரிகிறது . அந்த வகையில் காங்கிரஸ் கட்சி பாரதத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு மூல காரணமாக இருந்த பிரிட்டன் சாம்ராஜ்யம் சரியத் தொடங்கி இருப்பது சாதாரண விஷயம் இல்லை. இதன் மூலம் கடந்த காலங்களில் எல்லாம் பாரதத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்த உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தானுக்கும் முழுமையான ஆதரவையும் தளத்தையும் வழங்கி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வளர்த்து எடுத்ததும் இன்று அந்த பயங்கரவாத மூலங்கள் எல்லாம் சரியும்போது அந்த பயங்கரவாத பொருளாதாரத்தின் ஒரு பிடிமானமாக இருந்த பிரிட்டனின் பொருளாதாரமும் சரிவதும் கண் கூடாக தெரிகிறது.இதன் மூலம் பாரதத்தின் பயங்கரவாதம் காங்கிரஸ் பிரிட்டன் இடையே இருந்த கண்ணுக்குத் தெரியாத கூட்டணியை வெளிப்படையாக அம்பலமாகிறது.
இன்று பர்மிங்ஹாம் மாநகராட்சியின் திவால் நடவடிக்கை பல வகையிலும் பிரிட்டனின் உள்நாட்டில் எதிரொலிக்கும் இது போன்ற நொடிப்பு நிலைகள் பல்வேறு துறைகள் நிறுவனங்களில் தொடர கூடும். அவற்றையெல்லாம் சமாளித்து மீண்டும் எழுவதற்கு இனி கடந்த காலங்களைப் போல நயவஞ்சகமான திட்டங்கள் எதையும் செயல்படுத்த பிரிட்டனால் முடியாது. அதற்கு துணையாக எந்த பங்களிப்பையும் வழங்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பாரதத்தின் பகை நாடுகளிலும் இயலாத நிலை என்ற கட்டத்தில் தான் வேறு வழி இன்றி தன்னை தற்காத்துக் கொள்ளவும் தனது தேசத்தை பாதுகாத்துக் கொள்ளவும் நேர்மையான நிலையில் வாழ்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்த பிரிட்டன் அரசு நிர்வாகம் அந்த நேர்மையான வாழ்க்கைக்கும் அரசு நிர்வாகத்திற்கும் உலகில் ஒரு முன் உதாரணமாக இருக்கும் பாரதத்தின் ராஜ்யத்திலும் உதவி கேட்டு நிற்கிறது.
பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்ற சனாதனத்தின் வழிவந்த பாரதத்தின் ஆட்சியாளர்கள் அபயம் கேட்டு நிற்கும் பிரிட்டன் சாம்ராஜ்யத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் முழு ஒத்துழைப்பும் உதவியும் வழங்க தயாராகிறார்கள். அதே நேரத்தில் சமகாலத்திலோ எதிர்காலத்திலோ பாரதத்திற்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் பிரிட்டன் மண்ணில் இடம் தரக்கூடாது என்ற நிபந்தனை . எதிர்காலத்தில் பிரிட்டன் மூலமாக பாரதத்திற்கு கிடைக்கப்பெற வேண்டிய உதவிகள் ஒத்துழைப்புகள் ஒருங்கிணைப்புகள் என்று தங்கள் தேசத்தின் நலனை பாதுகாப்பை முன்னிறுத்தும் திட்டங்களோடு பிரிட்டனுக்கு உதவ தயாராகிறார்கள்.
பாரதத்தின் கடந்த கால ஆட்சியாளர்களும் பிரிட்டிஷ் கடந்த கால ஆட்சியாளர்களும் தேசத்தின் நலன் வளர்ச்சி என்பதை புறந்தள்ளி தங்களின் ஆட்சி அதிகாரம் சுயநலம் அதிகார கொள்ளை ஒன்றே இலக்காக்கி செயல்பட்டதும் அதன் காரணமாக இரு தேசங்களும் சீரழிந்ததும் கசப்பான வரலாறு. சமகால ஆட்சியாளர்கள் இரண்டு நாடுகளையும் வலுவாக கட்டி எழுப்பி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்பதால் இரு தேசங்களும் நம்பிக்கை நல்லெண்ணம் நட்புறவு அடிப்படையில் சகோதரத்துவத்தோடு கைகோர்த்து வளர்ச்சி பாதையில் பயணிக்க தயார் ஆகிறது. இந்த நல்லெண்ண நடவடிக்கை இரு நாடுகளையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லட்டும். பிரிட்டனின் சமகால நிலை பாரதத்தோடு பகை பாராட்டி பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இதர உலக நாடுகளுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.