கூட்டணியில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று அண்மையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாகவே தனது கருத்தை தெரிவித்து இருந்தார்…
ஸ்டாலின் முதல்வர் ஆக கூடாது என்று தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் பலர் விரும்புகின்றனர் என்று அரசியல் நோக்கர்கள் இன்று வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்..
- கூட்டணி கட்சிகளில் எவன் எவன் கூட இருப்பான் என்பது தேர்தலின் போது தான் தெரியும்” என்று துரைமுருகன் நக்கல் பேச்சு…
- நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு..
- தன்னை ஓரம் கட்ட துடிக்கும் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணன் அழகிரி வியூகம்..
- ஸ்டாலின் முதல்வர் ஆக மூத்த தலைவர் வைகோ உழைக்க வேண்டுமா? என்று ஒரு பக்கம் கண்டன குரல்..
- கூட்டணி கட்சிகள் தனிச்சின்னம் கேட்டு அடம்..
- இதற்கு ஒரு படி மேலே சென்ற கேடி பிரதர்ஸ் கூட்டணிக்கே குண்டு வைக்கும் விதமாக கருத்து கணிப்பு நடத்தி இருப்பது வி.சி.க மற்றும் ம.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
நல்ல கூட்டணியும் நாசமா போன கதையும் 😂
— SAFI (@Ahamedsafi1) January 2, 2021
திருவாளர் பப்ளுவை மதிப்பதாய் இல்லை. 😂🤣
234 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றால் கூட்டணி ஏன் , அவர்களே 234 தொகுதியிலும் போட்டியிடலாமே , கூட்டணி கட்சிகளின் வாக்கு வேண்டும் ஆனால் அவர்களுக்கு தனி அடையாளம் இருக்ககூடாது இது என்ன மனநிலை?😌
— ChaplinChellappa (@advocat93824751) January 2, 2021
திமுக கூட்டணியில் திருகுதாளங்களைச் செய்யும் சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருப்பது எந்தப் பலனையும் தராது.
2021 தேர்தலை நோக்கி வீறுநடை போடும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த எத்தனிப்பவர்கள் கலகலத்துப் போவார்கள்!
பாதையும் பயணமும், தெளிவும் திட்பமும் வாய்ந்தவை! கவனம் சிதறாது! pic.twitter.com/6RCvH5J4aW
— M.K.Stalin (@mkstalin) October 12, 2020