காங்கிரஸை விட எல்லாவற்றிலும் டாப்தான்!? நாடாளுமன்றத்தில் நிர்மலா சீத்தாராமன் நச்!

காங்கிரஸை விட எல்லாவற்றிலும் டாப்தான்!? நாடாளுமன்றத்தில் நிர்மலா சீத்தாராமன் நச்!

Share it if you like it

காங்கிரஸ் ஆட்சியைவிட பா.ஜ.க. ஆட்சி எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். தொடர்ந்து, ஜனாதிபதி உரை மீதான விவாதம் நடந்தது. இது முடிவடைந்த நிலையில், தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின்போது ராஜ்யசபாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 9.1 சதவிகிதமாக இருந்தது. இதனால், பா.ஜ.க. ஆட்சி அமைந்தபோது உலகளாவிய நிதி நெருக்கடி எங்களைத் தாக்கியது. ஆகவே, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ​​மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பு 9.57 சதவிகிதமாக இருந்தது.

ஆனால், நாங்கள் திட்டத்தை வெளிப்படையாகவும், சரியாகவும் பயன்படுத்தியதால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 1.1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு, தற்போது 2.32 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 2013-14-ம் ஆண்டில் 2.85 லட்சம் கோடியாக இருந்த ஏற்றுமதி தற்போது 4.7 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, 2013-14-ல் 275 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிய செலாவணி, தற்போது 630 பில்லியன் டாலராக இருக்கிறது. 36 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு தற்போது 80 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it