கல்லூரி வகுப்பறையில் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதித்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கூக்குரலிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த சில மாணவிகளுக்கு எதிராக காவி நிற உடை அணிந்து வந்த மாணவ, மாணவிகள் மற்றும் காவல்துறையினர் மீது கல்லெறிந்து பயங்கரவாதிகள் வெறித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் பயின்று வந்த அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த சிலர் கல்லூரி நிர்வாகத்தின் சட்ட, திட்டங்களுக்கு உட்படாமல் பர்தா அணிந்துள்ளனர். பர்தா அணிவது எங்கள் உரிமை தங்களை யாரும் தடை செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். இவர்களின் ஆணவ பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹிந்து மாணவிகளும், மாணவர்களும் பதிலுக்கு காவி நிறத்தில் உடை அணிந்தும், காவித் துண்டு அணிந்தும் கல்லூரிக்கு வந்தனர். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து, ஹிஜாப், பர்தா, புர்கா அணிய மாநில அரசு தடை விதித்தது. மேலும், இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து வழக்கையும் கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது கர்நாடக மாநில உயர் நீதிமன்றம். இந்த நிலையில்தான், ஹிந்து மாணவ, மாணவிகள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதனை தடுக்க முயன்ற போலீஸாரையும் அக்கும்பல் விட்டு வைக்கவில்லை. அவர்கள் மீதும் கல்லெறிந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது குறித்த காணொளியை தான் பிரபல அரசியல் விமர்சகர் அன்ஷுல் சக்சேனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.