இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது பெண் அடிமைத்தனம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அதிரடியாகக் கூறியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் சிலர் கல்லூரி நிர்வாகத்தின் சட்ட, திட்டங்களுக்கு கட்டுப்படாமல், பர்தா அணிந்து வந்துள்ளனர். பர்தா அணிவது எங்கள் உரிமை. எங்களை யாரும் தடுக்க முடியாது என்று ஆணவத்துடன் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் இந்த பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹிந்து மாணவிகளும், மாணவர்களும் காவி நிறத்தில் உடை அணிந்துவந்து எங்களுக்கும் உரிமையுள்ளது என்று சொல்லி பதிலுக்கு களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதான் இப்பொழுது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மாணவர்களிடையே மோதல் போக்கு ஏற்படாமல் இருக்க, மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பர்தா அணிவது இஸ்லாமியர்களின் உரிமை. அதில் யாரும் தலையிடக் கூடாது என தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஹிந்துக்களின் பண்பாடு, கலாச்சாரம், வழிபாட்டு முறையை குறிவைத்து இன்றுவரை தாக்கிப் பேசுவதையே நோக்கமாகக் கொண்டுள்ள இயக்கம் திராவிடர் கழகம். மேலும், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசி வருபவர் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி. இவர்தான், பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் நேர்காணலில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது பெண் அடிமைத்தனம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து பர்தா அணிவதற்கு ஆதரவு தெரிவிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், அரசியல் ஆதாயம் தேட முயலும் ஜால்ரா கும்பல்களுக்கும் சம்மட்டி அடியாக இருக்கும் என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.