மணல் கடத்தும் பாதிரியார்கள்: பணம் திருடும் கன்னியாஸ்திரிகள்!

மணல் கடத்தும் பாதிரியார்கள்: பணம் திருடும் கன்னியாஸ்திரிகள்!

Share it if you like it

கிறிஸ்தவ பாதிரியார்கள் ஒருபுறம் மணல் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, கன்னியாஸ்திரிகளோ சூதாடுவதற்கும், சுகபோகமாக வாழ்வதற்கும் பள்ளியின் நிர்வாக நிதி பணத்தை திருடும் செயல்களில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் மேரி மார்க்ரெட் க்ரூப்பர். 80 வயது கன்னியாஸ்திரியான இவர், செயின்ட் ஜேம்ஸ் கத்தோலிக்க பள்ளியில் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். இவருக்கு சூதாடும் பழக்கம் இருந்திருக்கிறது. மேலும், கோடை காலங்களில் சுற்றுலா செல்வது, குளிர்காலங்களில் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது என சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். இதற்கு அவரது சம்பளப் பணம் போதவில்லை. ஆகவே, பள்ளியின் நிர்வாக நிதி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பள்ளிக்கு அனுப்பப்படும் நன்கொடை ஆகியவற்றில் கைவைத்திருக்கிறார். பள்ளி நிர்வாகத்துக்கு வரும் அப்பணத்த தனது அக்கவுன்ட்டுக்கு மாற்றி வந்திருக்கிறார். இப்படியாக, அமெரிக்க பணத்தில் 8,35,000 டாலர், அதாவது நம் நாட்டு மதிப்பில் 6.23 கோடி ரூபாய் திருடியிருக்கிறார்.

இத்தகவல் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவரவே, கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். விசாரணையின்போது மேரி மார்க்ரெட் க்ரூப்பர் அளித்த வாக்குமூலத்தில், ‛நான் பாவம் செய்தது உண்மைதான். சட்டத்தை மீறிவிட்டேன். எனக்கு எந்த மன்னிப்பும் இல்லை. எனது குற்றங்கள் என்பது சட்டத்திற்கும் மேலாக, என் மீது பலரும் வைத்திருந்த புனிதமான நம்பிக்கையை மீறுவதாகும்’ என்று கூறி கதறி அழுதிருக்கிறார். இதையடுத்து, தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி ஒடிஸ் டி ரைட், ‛நீங்கள் பல ஆண்டுகளாக நல்ல ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். எப்படியோ திடீரென பாதை மாறிவிட்டீர்கள். இதை நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்’ என்ரு கூறிவிட்டு, கன்னியாஸ்திரி மேரி க்ரூப்பருக்கு 1 வருடம் 1 நாள் சிறை தண்டனை விதித்ததோடு, 8,00,000 டாலர் பள்ளிக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.


Share it if you like it