காலிஸ்தான் பயங்கரவாதிகள் மரண விவகாரத்தில் ஐஎஸ்ஐயை கோர்த்து விடும் கனடா

காலிஸ்தான் பயங்கரவாதிகள் மரண விவகாரத்தில் ஐஎஸ்ஐயை கோர்த்து விடும் கனடா

Share it if you like it

சமீபமாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் அவர்களின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக மர்மமாக மரணிக்கிறார்கள். இதில் கனடாவில் கொல்லப்பட்ட அடுத்தடுத்த மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் மரணத்தை கையில் எடுத்து கனடா நாட்டு பிரதமர் சர்வதேச ரீதியாக பாரதத்திற்கு எதிரான ராஜ்ஜிய நகர்வுகளை முன்னெடுத்தார். ஹர்தீப் சிங் நிஜார் விவகாரத்தில் பவன் குமார் ராய் ஐபிஎஸ் என்னும் இந்திய தூதரக அதிகாரி அதிலும் உளவுத்துறை பின்னணி கொண்டவர் கனடாவில் இருக்கும் இந்திய உளவாளிகளின் தலைவராக செயல்பட்டு அவரின் மூலமே இந்த கொலை நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டி அவரை கனடாவை விட்டு வெளியேற்றினார்.பதிலுக்கு பாரதமும் கனடா நாட்டு தூதரைவெளியேற்றியது. கனடா நாட்டு குடிமக்களுக்கு இந்திய விசா வழங்குவதை நிறுத்தியது.

காலிஸ்தான் பயங்கரவாத விவகாரத்தில் கனடாவில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்து ஐந்து கண் நாடுகள் அமர்வு முதல் ஐநா பொதுச் சபை வரை கனடாவிற்கு எதிரான ராஜ்ய ரீதியான நகர்வுகளை பாரதம் முன்னெடுக்கிறது. இதனால் கனடா நிலைகுலைந்துள்ளது. ஒருபுறம் உள்நாட்டில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள். பொதுமக்களிடையே அதிருப்தி .சர்வதேச அளவில் கனடாவிற்கு அதிருப்தியை அவமதிப்பை தேடி தந்த குற்றச்சாட்டு என்று கனடா பிரதமர் நிலைகுலைந்த நிலையில் தற்போது தனது பதவியையும் கனடா நாட்டு ராஜிய ரீதியான செயல்பாடுகளையும் கௌரவமாக நிலை நிறுத்திக் கொள்ள பாகிஸ்தானின் உளவுத்துறை மீது பழியை தூக்கி போட்டிருக்கிறது.

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மரணம் அதன் காரணமாக கனடா பாரதம் இடையே நிகழ்ந்திருக்கும் அடுத்தடுத்த ராஜ்ஜிய சிக்கல் இவற்றையெல்லாம் முன்னிறுத்தி இந்த கொலைகளை எல்லாம் கனடாவிற்கும் பாரதத்திற்கும் இடையே சிக்கலை உரங திட்டமிட்டு சூழ்ச்சியோடு பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொலைகளை நிகழ்த்தி இருக்கக்கூடும் என்று பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ மீது கனடா நாட்டு உளவுத்துறை குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. இதில் ஆடிப் போன பாகிஸ்தான் கொல்லப்பட்டவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள். கொலை நிகழ்த்தப்பட்டது கனடா நாட்டில் . அவர்கள் அனைவரும் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர்கள்..அதன் அடிப்படையில் அவர்களை கொன்றால் முதலில் கொலையாளிகள் எதிர்கொள்ள வேண்டியது கனடாவின் எதிர்ப்பை தான் .அந்த வகையில் தற்போது நீங்கள் பாரதத்திற்கு எதிராக முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் தானே ஐ எஸ் ஐ க்கும் எதிராக முன் வைத்திருப்பீர்கள்? கனடா போன்ற ஒரு வலுவான நாட்டை எதிர்க்கும் வலிமையும் ராஜிய பலமும் பாகிஸ்தானுக்கு இருக்கிறதா ? அல்லது கனடா நாட்டில் வந்து கனடா நாட்டு குடிமக்களை கொல்லும் அளவிற்கு பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு கட்டமைப்பும் பலமும் இன்று இருக்கிறதா? என்று எதிர் கேள்வி கேட்கிறது .மறுபுறம் கொல்லப்பட்டவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள். காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்கள். அதன் செயல்பாடுகள் பாகிஸ்தான் மண்ணிலும் உண்டு என்ற வகையில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நட்பு நாடு தான். அப்படி இருக்க காலிஸ்தான் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அவர்களை பாதுகாக்கும் தவிர எப்படி கொல்லும் ? என்ற கேள்வியை சர்வதேச வெளியுறவு துறைகளும் கனடாவிடம் கேள்வி எழுப்புகிறது.

உச்சகட்டமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தற்போதைய பாகிஸ்தானின் சூழ்நிலை உலக நாடுகளில் உதவி மனிதாபிமான அடிப்படையில் செய்யும் நிதி உதவிகள் வைத்து தான் அரசாங்கமே சுழல்கிறது . அப்படி இருக்க எங்களின் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டு நாங்கள் நிம்மதியாக கரை சேர்வதற்கே எந்த நாட்டின் உதவியை கேட்கலாம்? இருக்கும் பிரச்சனைகளை எப்படி தீர்க்கலாம் ? என்று தலையை பிடித்துக் கொண்டு நிற்கிறோம். இதில் நாங்கள் எங்கே இன்னொரு நாட்டின் விவகாரத்தில் தலையிடுவது ? அதிலும் கனடா போன்ற வலுவான ஒரு நாட்டின் உள்புகுந்து கொலை குற்றம் நிகழ்த்தும் அளவிற்கு எங்களுக்கு இப்போது பலமும் துணிவும் இருக்கிறதா? என்று அப்பாவியாக கேட்கிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயோ இன்னும் ஒரு படி மேலே போய் கனடாவை பார்த்து ஐயா உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாம் காலிஸ்தான் பயங்கரவாதிகள். அவ்வகையில் அவர்கள் முதலில் பயங்கரவாதிகள். அதிலும் பாரதத்திற்கு எதிரானவர்கள். சர்வதேச அளவில் பெரும் தொழில் வியாபார கட்டமைப்புகளோடு கனடாவில் குடிமக்களாக அரசு ஆதரவோடு வாழ்ந்தவர்கள். இவர்களை கொல்வும் அளவிற்கு ஐஎஸ்ஐ க்கு என்ன காரணம் இருக்க முடியும் ? கனடா நாடு குற்றம் சாட்டுவது போல் கனடாவிற்கும் பாரதத்திற்கும் இடையே சிக்கலை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் கூட அதை செய்வதற்கு வேறு எத்தனையோ வழிகளை தான் ஐஎஸ்ஐ கையில் எடுக்கும்.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கனவில் கூட பாரதத்திற்கு நல்லது நினைக்காது என்று பாகிஸ்தானுக்கும் தெரியும். பாரதத்திற்கும் தெரியும். அது உலகிற்கே தெரியும். அப்படி இருக்க பாரதத்தின் தேடப்படும் குற்றவாளிகள். காஷ்மீர் விவகாரத்தில் கடந்த காலங்களில் பாரதத்தின் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட பலரும் தற்போது இதே போல நிறைய பேர் பாகிஸ்தான் நாட்டில் வைத்தே கொலை செய்யப்படுகிறார்கள். அப்படி இருக்க பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தேடிப் பிடித்துக் கொன்று அதன் மூலம் உலக அளவில் நெருக்கடிகளை தேடி கொள்கிறது என்று நீங்கள் சொன்னால் இதைக் கேட்டு பாரதமே கைதட்டி சிரிக்கும். ஆனால் இந்த கொலைகளை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ செய்திருக்குமோ ? என்று சந்தேகிக்கிறோம் என்று நீங்கள் வாய் கூசாமல் பேசுகிறீர்களே இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா ? என்று தலையில் துண்டை போட்டுக்கொண்டு அழுகிறது.

பாகிஸ்தானின் வெளியுறவு துறையோ ஐயா நாங்கள் ஏற்கனவே பாரதத்தின் பண மதிப்பு காரணமாக திவாலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். கொரோனா காலம் முதல் தற்போதைய பொருளாதார நெருக்கடி வரை எத்தனையோ காலத்தில் உணவுப் பொருட்கள் மருந்து பொருட்கள் என்று பாரதத்தின் உதவியால் தான் எங்களின் காலம் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உள்நாட்டு குழப்பங்களை தீர்த்துக் கொள்ள வழி தெரியாமல் நாங்கள் திண்டாடி வருகிறோம். எங்களைப் பார்த்து பாரதத்தின் தேடப்படும் பயங்கரவாதிகளை கொன்று பாரதத்திற்கும் கனடாவிற்கும் சிக்கலை உருவாக்க வேண்டும் என்று எங்களின் நாட்டு உளவுத்துறை தான் சதி செய்கிறது என்று சொல்லி எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் கால்படி கோதுமையிலும் அரைப்படி அரிசியிலும் கூட மண்ணள்ளி போட்டு விடாதீர்கள். உங்களுக்கு புண்ணியமாக இருக்கும் என்று கனடா வெளியுறவு துறையிடம் பஞ்சாயத்து பேசிக் கொண்டிருக்கிறது.

ஐந்து கண் நாடுகள் சர்வதேச அமைப்புகள் எல்லாமே உரிய ஆவணங்கள் இல்லாமல் பாரதத்தின் மீது கனடா நாடு முன் வைத்த குற்றச்சாட்டை நிராகரித்ததோடு கனடாவின் செயலை கண்டித்து இருக்கிறது. மேலும் பாரதத்தின் உளவுத்துறை மிகவும் பொறுப்பானது. அவர்கள் தேசத்தின் பாதுகாப்பு நலன் கடந்து வேறு எந்த விவகாரத்தையும் அவர்கள் தலையிட மாட்டார்கள் .அதிலும் தன் தேசத்தின் பாதுகாப்பு தேடப்படும் பயங்கரவாதிகள் விவகாரத்தில் அவர்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாக நகர்வுகளை மேற்கொள்வார்கள் அப்படி இருக்க உரிய ஆதாரம் இன்றி அவர்கள் மீது குற்றம் சாட்டுவதும் அவர்களை விசாரணைக்கு அழைப்பதும் சர்வதேச விதிகளுக்கு புறம்பானது என்று கனடாவை கண்டித்து வருகிறது.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் ? என்ற நிலையில் பயங்கரவாதம் என்றாலே பேர் போன பாகிஸ்தான் ஐஎஸ்ஐ மீது பழியை போட்டு இப்போதைக்கு இந்த விவகாரத்தில் இருந்து கனடாவையும் கனடா நாட்டு பிரதமரையும் காப்பாற்றினால் போதும் என்று பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கை காட்ட போய் தற்போது அந்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதன் நடவடிக்கைக்கு சம்பந்தமாக உலக நாடுகள் முன்வைக்கும் விவகாரங்களும் கனடாவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.‌ இதுவரையில் கனடாவிற்கு அறிவுரை வழங்கி கண்டிப்பு காட்டி இனி இது போல் சில்லறைத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தவர்கள் எல்லாம் இப்போது கனடாவை பார்த்து இது உனக்கு தேவைதானா ? என்று கைதட்டி சிரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. போதாக்குறைக்கு பாகிஸ்தானின் வெளியுறவுத் துறையும் ஐஎஸ்ஐயும் கூட நமக்கு அறிவுரை வழங்கும் அளவில் நம்முடைய செயல்பாடுகள் மாறி வருவதில் கனடா நாட்டின் வரும் பெரும் அவமதிப்பை உணர்கிறார்கள்.

உலக அரங்கில் பெரும் மிடுக்கோடும் கௌரவமாகவும் வலம் வந்த கனடாவை இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மரண விவகாரத்தை கையில் எடுத்து கனடா நாட்டு பிரதமர் அவரின் மலிவான செயல்பாடுகள் உலக அரங்கில் பெரும் அவமதிப்பையும் தேடிக் கொடுத்ததோடு பாரதத்துடன் ஆன இணக்கமான உறவையும் சீர்குலைத்ததில் கனடா நாட்டு அரசின் மீதும் பிரதமரின் மீதும் உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார்கள். கனடா நாட்டு மக்கள் கூடிய விரைவில் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் கனடாவில் அடுத்து வரும் தேர்தல் தற்போதைய பிரதமருக்கு பெரும் பின்னடைவை தரும் அடுத்து வரக்கூடிய அரசியலும் ஆட்சி அமைப்பும் முழுமையாக பாரதத்துடன் இணக்கமும் நட்புறவும் காக்கும் வகையிலும் கனடா மண்ணில் இருந்து காலிஸ்தான் பயங்கரவாதத்தை அப்புறப்படுத்தும் வகையிலுமே இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

பழைய நினைவில் தனது இருப்பை தக்க வைக்க சமீபத்தில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலாளர் கனடாவின் விவகாரத்தில் கருத்து தெரிவித்த போது உலகில் பாரதத்தை பார்த்து பயம் கொள்ளாத ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே என்று பேசி இருந்தார். அதை தொடர்ந்து காலிஸ்தான் பயங்கரவாதத்தின் கொலை வழக்கில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ கைவரிசை இருக்கலாம் என்று கனடா சந்தேகம் கிளப்புகிறது. எங்கே வாய்ப்பு கிடைக்கும்? அதை வைத்து பாகிஸ்தான் க்கு எப்படி லாடம் கட்டலாம் ? என்று பாரதம் காத்திருக்கும் நிலையில் உள்நாட்டில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தற்போது இந்த இரண்டையும் சேர்த்து வைத்து உலக அளவில் கிடைக்கும் சிறு சிறு மனிதாபிமான உதவிக்கும் கூட வேட்டு வைக்கும் வகையில் கனடா பாரதம் ஏதேனும் செய்தால் பாகிஸ்தான் நிலை அம்போ தான். இதனால் நடப்பது கனடாவின் கர்மாவா? பாகிஸ்தானின் கர்மாவா? விதியா சதியா என்று பாகிஸ்தான் ஐஎஸ்ஐ குமுறிக் கொண்டிருக்கிறது.


Share it if you like it