கடந்த 19 ஆம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற நாம் தமிழர் அரசியல் கூட்டத்தில், “கொரோனா நோய் என்பதே கிடையாது என்றும்,
அது வதந்தி என்றும், மக்களை குழப்பி தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டது மட்டும் அல்லாமல், பாரத மாதா பற்றியும், பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பற்றியும், ஒருமையில், கொச்சையான, அருவருக்கத்தக்க வார்த்தையில் பேசியிருக்கும்,
நடிகர் மன்சூர் அலிகானின் காணொளியானது, தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து மத கலவரத்தை தூண்டும் வகையிலும், சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்ற நடிகர் மன்சூர் அலிகான் மீது, தமிழக மக்கள் மற்றும் தேச பக்தர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் திரு.அஸ்வத்தாமன் அவர்கள், காவல் ஆணையர்க்கு புகார் மனு அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் காவல் துறை அவர் மீது 14 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.
https://www.facebook.com/100001419895824/posts/3639508496106444/?sfnsn=wiwspwa