கவிதாவை கைது செய்த சிபிஐ !

கவிதாவை கைது செய்த சிபிஐ !

Share it if you like it

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதா ஏற்கெனவே அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, கடந்த 5-ம் தேதி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கவிதாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, தற்போது அவரை கைது செய்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத் துறை மார்ச் 15-ம் தேதி கைது செய்தது. அவரை முதலில் 7 நாட்களும் பிறகு மேலும் 3 நாட்களும் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அமலாக்கத் துறை காவல் முடிந்து மார்ச் 26-ம் தேதி கவிதா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கவிதா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கவிதாவின் நீதிமன்ற காவல் இன்று (ஏப்.9) நிறைவடைந்த நிலையில், அமலாக்கத் துறை அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் காலையில் ஆஜர்படுத்தியது. அப்போது கவிதாவின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அமலாக்கத் துறை கோரியது. இதனை ஏற்ற நீதிமன்றம் காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.


Share it if you like it