ப. சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்பொழுதைய ராஜ்யசபா எம்.பி.யாக இருப்பவர் ப. சிதம்பரம். இவர், அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில், இவரது மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று கொடுத்ததாக புகார் எழுந்தன.
அந்தவகையில், தந்தை மகன் இருவருக்கும் சொந்தமான பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த மே மாதம் 18- ம் தேதி அதிரடியாக சோதனை நடத்தி இருந்தனர். இதுதவிர, பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. மேலும், கார்த்தி சிதம்பரத்திடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தான், சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை இவ்வீட்டில் சோதனை மேற்கொண்ட இருக்கின்றனர். அப்பொழுது, ஒரு அறையில் இருந்த பீரோவின் சாவி லண்டனில் இருந்த சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து உள்ளது. இதையடுத்து, அந்த பீரோவிற்கு சி.பி.ஐ அதிகாரிகள் சீல் வைத்து இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, சிதம்பரம் குடும்பம் மீண்டும் சென்னை திரும்பியதை அடுத்து 6 பேர் கொண்ட சி.பி.ஐ குழு அவர்களிடம் இருந்து சாவியை பெற்று அந்த பீரோவை ஆய்வு செய்து வருவதாக தற்பொழுது செய்திகள் வெளியாகி இருக்கின்றன.