சண்டை நிறுத்தம் – பாக்., மீறாதவரை அமைதி நிலவும்

சண்டை நிறுத்தம் – பாக்., மீறாதவரை அமைதி நிலவும்

Share it if you like it

கடந்த 2003ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது ஆனால் அதனை சிறிதும் மதிக்காமல் தொடர்ந்து எல்லை கட்டுப்பட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தது ஆனால் கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவ தளபதி திரு நரவனே அவர்கள் ;

இந்நிலை தொடர்வது பாகிஸ்தான் கைகளில்தான் உள்ளது, அவர்கள் ஒப்பந்தத்தை மீறாதவரை இந்தியாவும் அதனை தொடரும் என்றார். எல்லையில் 100 நாட்களை கடந்து அமைதி நிலவுவதால் பாகிஸ்தான் மீது நம்பிக்கை பிறந்துள்ளதா என்ற கேள்விக்கு கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ந்த சம்பவங்களால் பாகிஸ்தான் மீது நம்பிக்கை இன்மை ஏற்பட்டுள்ளது அவையனைத்தும் ஒரே இரவில் மாறிவிடாது என்றார்.


Share it if you like it