ஜி.எஸ்.டி. விடுவிப்பு: தி.மு.க.வுக்கு அண்ணாமலை கெடு விதிப்பு!

ஜி.எஸ்.டி. விடுவிப்பு: தி.மு.க.வுக்கு அண்ணாமலை கெடு விதிப்பு!

Share it if you like it

தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அரசு விடுவித்திருக்கிறது. ஆகவே, தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழகத்தில் நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டிசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும். சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் கொண்டு வரப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. அளித்திருந்தது. மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்பதுபோல ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டார்கள் அக்கட்சியின் மூத்த தலைவர்கள்.

ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், மேற்படி வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டும் தங்களது திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள், தி.மு.க.வை வசைபாடி வருகின்றனர். அதேபோல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து விட்டதால், ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தி.மு.க. அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும், வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசை கண்டித்து, பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை எதிர்க்கட்சிகளும் கண்டித்தன. குறிப்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அதற்கு, மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. வரிப் பணத்தை கொடுத்தால், நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுகிறோம் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், தி.மு.க. தலைவர்களும் மத்திய அரசு மீது பழியை போட்டு வந்தனர். இத்தனைக்கும் மேற்படி ஜி.எஸ்.டி. தொகை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கிடைக்க வேண்டிய நிலுவை அல்ல. அ.தி.மு.க. ஆட்சியில் நிலுவை இருந்த தொகை என்பது வேறு கதை.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை மே மாதம் 31-ம் தேதி விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் 31.500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க சமீபத்தில் தமிழகத்திற்கு வந்தார் பாரத பிரதமர் மோடி. அரசு விழா நடந்த இந்த மேடையில், அரசியல் பேசிய தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஒருவேளை மத்திய அரசு ஜி.எஸ்.டி. தொகையை விடுவிக்கப்போகும் விஷயம் தெரிந்து விட்டதோ என்னவோ.

இந்த நிலையில்தான், திட்டமிட்டபடி மே 31-ம் தேதி வரை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை 86,912 கோடி ரூபாயை மத்திய அரசு இன்று விடுவித்திருக்கிறது. இதில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 9,602 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, இனி எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை இல்லை என்பதையும் மத்திய அரசு கறாராகக் கூறிவிட்டது. இந்த சூழிலில், தி.மு.க. அரசு இத்தனை நாளாக இந்த ஜி.எஸ்.டி.யைத்தானே கேட்டுவந்தது. தற்போது அத்தொகை விடுவிக்கப்பட்டு விட்டதே? ஆகவே, 2021 தேர்தலின்போது தி.மு.க. கொடுத்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். குறைக்கும் என்று நம்புகிறோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it