தமிழகத்தை சேர்ந்த யோகாசன பாட்டி நாணம்மாளின் திறமையும் சேவையும் பாராட்டி மத்திய அரசு 2016-ம் ஆண்டில் மகளிர் வலிமை என்னும் பொருள்படும் ‘நாரிசக்தி’ விருது மற்றும் 2017-ம் ஆண்டில் ’யோகா ரத்னா’ விருது கடந்த 2018-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது போன்ற பலவிருதுகளை வழங்கி கௌரவித்தது. மத்திய அரசின் இச்செயல் கோவை மக்களிடையே மட்டுமின்றி தமிழக மக்களிடையிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை பற்றிய பாடங்களை மத்திய படத்திட்டமான CBSE ல் சேர்த்துள்ளது மத்திய அரசு. இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் யாரும் இந்நடவடிக்கைக்கு இதுவரை வாழ்த்துகளையோ, மகிழ்ச்சியையோ தெரிவிக்காதது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றும் இல்லாத விஷயங்களை பூதாகாரப்படுத்தி மத்திய அரசுக்கு எதிராக மக்களை போராடத் தூண்டும் இவர்கள் என் இது போன்ற நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இல்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.