Share it if you like it
வெளிநாட்டு வர்த்தகம் இனி இந்திய ரூபாயில் சாத்தியம் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவர் பியூஸ் கோயல். இவர், அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் :
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் இந்திய வங்கிகளில் வோஸ்த்ரோ கணக்குகளைத் தொடங்க உள்ளது. எனவே, வர்த்தகர்கள் இந்திய ரூபாயில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பணம் செலுத்த முடியும். 18 நாடுகளைச் சேர்ந்த 60 வங்கிகளின் விண்ணப்பத்தை ஏற்று வோஸ்த்ரோ கணக்கைத் தொடங்குவதற்கான அங்கீகாரத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. ஆகவே, பல நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புவதாக அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
Share it if you like it