சந்திராயன் 3 – வெற்றி கொண்டாட்டம் கடந்து தேசத்தின் பாதுகாப்பு  விஷயத்தில் எச்சரிக்கை தேவை

சந்திராயன் 3 – வெற்றி கொண்டாட்டம் கடந்து தேசத்தின் பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை

Share it if you like it

சுதந்திர இந்தியாவில் தேசம் எந்தவிதமான வளர்ச்சியையும் சீர்திருத்தத்தையும் முழுமையாக எட்டக்கூடாது. அதன் தொடர்ச்சியான உள்நாட்டு வளர்ச்சி சர்வதேச அளவில் கௌரவம் எந்த நிலையிலும் கிடைத்து விடக்கூடாது என்பதில் பல நூறு ஆண்டுகள் இந்த தேசத்தை அடிமைப்படுத்தி ஆண்டவர்கள் தங்களுக்குள் தெளிவாக பல திட்டமிடலை உருவாக்கி வைத்து தான் பிரிவினையை முன்வைத்து தேசத்திற்கு உள்ளும் புறமும் பெரும் சிக்கல்களை எல்லாம் உருவாக்கிவிட்டு போனார்கள்.

அந்த வகையில் பெரும் குழப்பமும் சட்ட சிக்கல்களும் பன்முகத்தன்மையை பாதிக்கும் வகையிலான பல்வேறு அச்சுறுத்தல்களும் சூழ்ந்து கொண்டு எந்த ஒரு திடமான முடிவையும் எடுக்க முடியாது .அப்படி எடுக்கும் பட்சத்தில் அதன் விளைவுகள் மதரீதியான பிளவுகளையும் குழப்பங்கள் ஏற்படுத்தி பெரும் அசம்பாவிதங்களில் போய் முடியும் என்ற நிலைதான் இன்று வரை தொடர்கிறது.

அதன் வெளிப்பாடு தான் இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்து தேச பிரிவினையின் போது சொந்த மண்ணில் அகதியான மக்கள். அவர்களின் நிலையைக் கண்டு எதிர்காலத்தில் இது போன்ற துரதிஷ்டம் தன் சந்ததிகளுக்கு வந்து விடக்கூடாது என்ற விழிப்புணர்வோடு இருக்கும் மக்கள் ஒரு பக்கம். இதைப் பற்றிய எந்த புரிதலும் அச்சமும் இன்றி அறியாமையில் இருக்கும் சுயநல கும்பல் ஒரு பக்கம் என்று பெரும்பான்மை மக்களை சிதறு தேங்காயாக இருக்கிறார்கள். அவர்கள் விழிப்படைய வேண்டும் என்று முயற்சியாளர்கள். மதரீதியான அவதூறு உயிர் அபாயங்களை எதிர் கொள்ளும் அளவில் உள்நாட்டு பிரிவினை மதபயங்கரவாதம் தெளிவான திட்டமிடலோடும் உறுதியான கூட்டணியில் செயல்படுகிறது.

மறுபக்கம் பிரிவினையிலும் திருப்தி காணாத எஞ்சி இருப்பதும் தங்களுக்கானதே என்ற ஆக்கிரமிப்பு மனநிலையில் அதற்கான முன்னெடுப்புகளை மதரீதியாக முன்னெடுக்கும் மக்கள். அவர்களின் வாக்கு வங்கி தனதாக இருக்க வேண்டும் என்ற கோணத்தில் வாக்கு வங்கி அரசியல் செய்யும் ஆளும் வர்க்கங்கள் என்று அனைத்து வகையிலும் தேசம் சீரழிவை மட்டுமே கண்டது. இன்று ஆட்சியாளர்கள் வாக்கு வங்கி அரசியல் கடந்து தேச பாதுகாப்பு மக்கள் நலன் என்று கோணத்தில் பயணிக்கும் போது தங்களின் ஆக்கிரமிப்பு தடைபடும் வன்மத்தில் அவர்கள் ஆட்சியாளர்களை அவர்கள் ஆதரவாளர்களை கொன்று குவிக்க தயாராகிறார்கள்.

இதையெல்லாம் மீறி உள்நாட்டில் சுயசார்பு வளர்ச்சி பாதுகாப்பு என்பதை எட்ட வேண்டும் என்ற ரீதியில் எந்த ஒரு புதிய முயற்சி நிர்வாக சீர்திருத்தம் புதிய சட்ட திட்டம் கொள்கை முடிவு என்று அரசு எதைக் கொண்டு வந்தாலும் அதை மத ரீதியாக எதிர்த்து போராட்டம் செய்யும் ஒரு சாரார். அவர்களுக்கு ஆதரவாக வாக்கு வாங்கி அரசியல் செய்யும் ஒரு சாரார் என்று தேசம் ஒரு சாண் ஏறினால் ஒரு முழம் சறுக்கும் என்ற கண்கட்டு வித்தையில் தான் காலம் கழித்து வந்தது.

இறையருளால் தனி மனித சாதனைகளும் அல்லது அமைப்பு சார்ந்த முயற்சிகளோ வெற்றி பெற்று தேசம் ஒரு பெருமிதத்தில் மிதக்குமானால் அதை சீர்குலைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வன்மத்தோடு ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து தேசத்தை துக்கத்திலும் மக்களை அச்சத்திலும் அழுத்துவதே கடந்த கால வரலாறு.

இந்தியாவை அணு ஆராய்ச்சியில் சுயசார்பு பெற்ற நாடாக முன்னெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்த ஹோமி பாபா விக்ரம் சாராபாய் உள்ளிட்டவர்களின் மர்மமான மரணங்கள். இந்தியாவின் சிக்கல்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி யின் மர்ம மரணம். விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ள போதிய உட்கட்டமைப்புகள் இல்லாமல் ஆரம்ப காலத்தில் பெரும் சிரமங்களை அனுபவித்த அப்துல் கலாம் அருணாச்சலம் உள்ளிட்டவர்களின் உழைப்பு .தேசத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் ஒரு தனி மனிதனை மரணத்தின் வாயில் வரை கொண்டு போன நம்பினாராயணன் விவகாரம் என்று இந்த நாட்டின் வளர்ச்சியை தனது உழைப்பால் சாதிக்க நினைத்தால் அனைவரும் திட்டமிட்டு அலைகழிக்கப்படுவது துன்புறுத்தப்படுவது அல்லது மரணிப்பது என்று ஏதோ ஒரு நூலிழையில் ஒரு மர்மத்தால் அச்சுறுத்தப்பட்டே வந்தார்கள்.

தேசத்தின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித நவீன உபகரணங்களும் ஆயுதங்களும் இல்லாத நிலையில் கூட இந்தோ சீனோ யுத்தத்தின் போது ராஜீய ரீதியான பின்னடைவாக இருந்தாலும் ராணுவ ரீதியாக பின்னடைவு இல்லை என்று சீன ராணுவத்தை பந்தாடிய இந்திய ராணுவம் சொந்த நாட்டால் கைவிடப்பட்டு அவர்கள் தங்களையும் காத்துக் கொண்டு தேசத்தையும் காக்க வேண்டும் என்று மரணத்தின் வாயிலில் நின்ற வரலாற்று துரோகம் இதுவரையில் உலகம் காணாதது.

இந்திய பாகிஸ்தான் யுத்தங்களின் போதெல்லாம் இந்தியாவில் போர் கைதியான பாகிஸ்தானியர்கள் பத்திரமாக நாடு திரும்பினார்கள். ஆனால் பாகிஸ்தானில் போர் கைதியான இந்தியர்கள் பிணம் கூட நாடு திரும்பாது என்ற நிலை நீடித்தது .அதற்கு முழு ஆதரவு இந்திய அரசியலில் மேல் மட்டம் வரை விரவி இருந்தது. இந்த மர்மத்தின் பின்னணியை கார்கில் யுத்தத்தின் போது வாஜ்பாய் அரசு இந்திய ராணுவத்திற்கு வான்வழி உதவியை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உத்தரவிற்கு பெரும் எதிர்ப்பும் விமர்சனங்களும் வந்து உறுதிப்படுத்தியது.

பின்னாளில் நாடாளுமன்ற தாக்குதல் காத்மாண்டுவில் இருந்து இந்திய விமானம் கடத்தப்பட்ட விவகாரம் என்று மக்களின் பாதுகாப்பு தேசத்தின் பாதுகாப்பில் கூட தங்களின் நாலாந்தர அரசியலை செய்து அவர்களின் துரோக முகத்தை வெளிப்படுத்தினார்கள்.ஆட்சி மாறினால் கூட காட்சி மாற்றம் வரக்கூடாது. வநந்தாலும் நாங்கள் விடுவதற்கு இல்லை என்று இங்கேயே இருந்து கொண்டு தேசத்தை முடக்கி அந்நியர்களுக்கு விசுவாசம் காட்டும் அந்த மர்மத்தால் தேசம் கண்ட இழப்புகளும் சீரழிவுகளும் கொஞ்ச நஞ்சம் அல்ல.

கால் நூற்றாண்டுகள் இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகள் முதல் விண்வெளி ஆய்வு வரை ஏதேனும் ஒரு விஷயத்தில் நாடு சாதிக்கும் எனில் அதன் வெற்றியை முழுமனதாக கொண்டாட முடியாது. எங்கோ ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து நாட்டையும் மக்களையும் துக்கத்தில் ஆழ்த்தும் .அதன் பின்னணி என்ற என்பதை கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் தேசிய புலனாய்வு முகமைகளும் மத்திய பாதுகாப்பு உளவுத்துறை அமைப்புகளும் வெளியிடும் அதிர்ச்சிகரமான உண்மையில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மும்பை தாக்குதல் முதல் உள்நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் வரை மக்கள் மடிந்த போது மௌனம் காத்த ஆட்சியாளர்கள் இருந்தவரையில் இங்கு யாருக்கும் பிரச்சனை இல்லை . ஆனால் பாலக்கோடு தாக்குதலுக்கு பதிலடி என்று எல்லையை தாண்டி போய் தீவிரவாதிகள் மேல் நடவடிக்கை எடுக்கும் போது அவர்கள் அத்தனை பேரும் பகைநாட்டிற்கு எதிராக வெளிப்படையாக பொங்கி எழுந்தார்கள்.

கள்ள நோட்டுகள் கள்ளச் சந்தை ஆயுதம் பதுக்கல் வன்முறை தீவிரவாதம் என்று தேசம் பாதுகாப்பின்றி அச்சத்தின் பிடியின் வாழ்ந்தபோது மக்கள் கொத்துக்கொலையில் மடிந்த போது அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை . ஆனால் பண மதிப்பிழப்பு என்ற ஒற்றை நடவடிக்கையின் மூலம் இந்த அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முயன்ற போது அவர்கள் அனைவரும் கைகோர்த்து வீதியில் இறங்கி போராடினார்கள்.

70 ஆண்டுகள் பயங்கரவாதத்தின் விளைவுகளை ஒவ்வொரு நாளும் ரத்த பலியாக தேசம் உயிர் பலியாக கடந்து வந்த போது அவர்களுக்கு வலிக்கவில்லை. ஆனால் அது போன்ற நடவடிக்கைகள் இனி எந்த காலத்திலும் நிகழா வண்ணம் பதில் அடிகளும் தற்காப்பும் நடவடிக்கைகளும் உள்நாட்டு பாதுகாப்பு பலப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொண்ட போது அவர்கள் மனித உரிமை மத உரிமையும் பற்றி ஆட்சியாளர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.

ஒரு விளையாட்டுப் போட்டியில் சர்வதேச அரங்கில் தேசம் சாதித்து நிற்கும் போது அந்த மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளும் முன் எல்லையில் இரண்டு வீரர்களின் தலையை வெட்டி உங்களை எந்த வகையிலும் மகிழ்ச்சியாக இருக்க விடமாட்டோம் என்று வெளிப்படையாக கொக்கரித்த போது அவர்கள் மௌனம் காத்தார்கள் .ஆனால் சிறப்பு அந்தஸ்து விலக்கி ஒரு மாநிலத்தின் அரசியல் குழப்பம் காரணமாக ஒரு தேசமே பெரும் பாதுகாப்பு சுமையை அனுபவித்து வந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்த போது அவர்கள் அத்தனை பேரும் இன்றுவரை எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

சரப்ஜித் சிங் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்டதில் அவர்களுக்கு மனித உரிமை பாதிக்கவில்லை. ஆனால் அபிநந்தனை பத்திரமாக மீட்டபோது எரிச்சலானது. பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் இருக்க கூடாது என்று பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் இன்று வரை குஷ்பூஷன் ஜாதவ் பற்றி மனித உரிமை பேசுவாரில்லை.

இவர்களின் பலரும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் பிறப்புச் சான்றிதழ் முறை கடவுச்சீட்டு வரை அத்தனையும் இந்திய அடையாளமாக இருந்த போதிலும் இவர்களின் உணர்வும் விசுவாசம் மட்டும் இந்தியாவின் பகை நாடுகளை சார்ந்தே இருக்கும். இந்தியா பாகிஸ்தான் என்று வந்தால் இவர்களின் ஆதரவு பாகிஸ்தானிற்கு இருக்கும். இந்தியா சீனா என்று வந்தால் இவர்களின் ஆதரவு எப்போதும் சீனாவின் பக்கமே இருக்கும்.

இந்தியாவின் நெருக்கடி காலத்தில் தாமாக முன்வந்து உதவும் இஸ்ரேல் இவர்களுக்கு பகை நாடு. இங்கு ஊடுருவி பயங்கரவாதம் செய்யும் பாகிஸ்தான் சகோதர தேசம். இந்திய உறவை போற்றி வணங்கும் திபெத் தைவான் மக்கள் இவர்களுக்கு அந்நியர்கள். ஆனால் முன்னாள் இந்திய பிரதமர் இராஜீவின் கொன்ற கொலையாளிகளின் இலங்கை தமிழர்கள் இவர்களுக்கு தொப்புள் கொடி உறவுகள்.

எதிரி நாடுகளால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் வரும்போது ஆட்சியாளர்களின் திறமையின்மை நிர்வாகம் இன்மை தேசம் அபாயத்தில் இருக்கிறது என்று பாடம் எடுப்பார்கள். ஆனால் சொந்த நாடு ஏதேனும் ஒரு வளர்ச்சியை எட்டிப் பிடித்தாலோ ? அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை சாதித்தாலும் இது தேவையில்லாத விஷயம் இதையெல்லாம் வைத்து என்ன சாதிக்க முடியும்? என்று அலட்சியம் பேசுவார்கள். இன்று இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பையும் கூட கொச்சைப்படுத்தும் அளவில் வந்து நிற்கிறார்கள்.

சாதாரண தனி மனிதர்கள் கட்சிகள் அமைப்புகள் அறக்கட்டளைகள் என்ற பெயரில் தொடங்கி கலைத்துறையினர் ஊடகவாதிகள் பிரபலங்கள் அரசியல்வாதிகள் என்று பல்வேறு முகமூடிகளில் இவர்கள் இருந்தாலும் இவர்கள் அத்தனை பேரும் இந்து இந்திய விரோதம் என்ற ஒற்றை புள்ளியில் ஒருங்கிணைகிறார்கள். இவர்களின் ஒருங்கிணைப்பு உள்நாட்டு அளவில் ஒரு ஒற்றுமையையும் சர்வதேச அளவில் பல்வேறு அந்நிய இந்திய விரோத சதிகாரர்களின் ஒருங்கிணைப்பிலும் ஒன்றிணைவது தேசத்தின் பாதுகாப்பிற்கு எந்நேரமும் அச்சுறுத்தலையே விளைவிக்கிறது.

இதையெல்லாம் கண்டறிந்த மத்திய ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுப்பதையும் தங்களின் அரசியல் அதிகாரம் அரசு எந்திர அதிகார பலம் கொண்டு அவர்கள் முடக்கத்தான் பார்க்கிறார்கள். மறுபுறம் பலவீனமான சட்டங்களை கைவிட்டு உறுதியான புதிய சட்டங்களை இயற்றுவதற்கும் எதிர்ப்பு குரல் கொடுப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் இந்திய இஸ்ரோ தோல்வி அடைந்த சந்திராயன் 1-2 முயற்சியை மீண்டும் தொடர்ந்து சந்திராயன் 3 வெற்றி பெற்றதோடு உலகில் இதுவரையில் எந்த நாடும் சாதிக்காத ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறது . இந்த வெற்றியை தேசம் மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இவர்கள் மட்டும் இது உண்மையில் நடந்ததா அல்லது கிராபிக்ஸ் மாய்மாலமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இதே கேள்வியை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் விவகாரத்திலும் கேட்டார்கள். இன்னும் சில அறிவு ஜீவிகள் இதை வைத்து என்ன செய்து விட முடியும் இல்லை இது எல்லாம் வெறும் கட்டுக்கதை சர்வதேச அளவில் ஏதோ ஒரு சதி நடக்கிறது என்று விஷம பிரச்சாரங்களை செய்கிறார்கள். இதையெல்லாம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சகம் மௌனமாக வேடிக்கை பார்க்கிறது என்பது வேதனை.

இரண்டு தினங்களாக தேசம் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது சில குறிப்பிட்ட சாரார்கள் மட்டும் கடும் வெறுப்பிலும் வன்மத்திலும் இருப்பதும் அவர்களால் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியாமல் தேசத்தை பொதுவெளியிலேயே சமூக ஊடகங்கள் ஊடகங்கள் வாயிலாக வன்மத்தை கக்குவதை பார்க்கிறோம் . இது வெறும் வன்மமாக கருத்தியலாக மட்டும் கடந்து போகும் என்று அலட்சியமாக இருக்காமல் இந்த வன்மத்தின் வெளிப்பாடு எங்கு எப்படிப்பட்ட சதி செயலாக வெளிப்படும் என்ற எச்சரிக்கை தேவை .

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா கொண்டாட்டத்தை எதிர்த்தார்கள். சில தினங்களில் பெரும் விபத்து அசம்பாவிதம் நடந்நது. பெரும் உயிர்ச்சேதம் இழப்பில் தேசம் நிலைகுலைந்த போது அதை அவர்கள் வெற்றி விழா போல் கொண்டாடினார்கள் . உண்மையில் நடந்தது விபத்தா அல்லது திட்டமிட்ட சதி செயலா தொழில்நுட்ப ரீதியான பயங்கரவாத தாக்குதலா என்று பல அமைப்புகள் விசாரணை தொடங்கிய போது அதை கடுமையாக எதிர்த்தார்கள். எனில் இவர்கள் யார் இவர்களின் நோக்கம் என்ன என்பதை உணர்ந்து இனி இது போல் ஒரு அசம்பாவிதம் நிகழா வண்ணம் மத்திய அரசு உள்ளும் புறமும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

சதிசெயல் நடந்து முடிந்த பிறகு நடவடிக்கை எடுத்தாலும் அதன் வடுக்களும் இழப்புகளும் ஈடு செய்ய முடியாதவையாக இருக்கும். எனவே கடந்த கால நிகழ்வுகளை மனதில் கொண்டு மத்திய அரசு நாடு முழுவதும் பாரபட்சமின்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும். தேசத்தின் உள்ளும் புறமும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி உச்சகட்ட உஷார் நிலையை அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Share it if you like it