காவு வாங்க காத்திருக்கும் திராவிட மாடல் ‘சுவர்’!

காவு வாங்க காத்திருக்கும் திராவிட மாடல் ‘சுவர்’!

Share it if you like it

தொடக்கப்பள்ளி மாணவர்களின் உயிரை காவு வாங்கக் காத்திருக்கும் சுற்றுச்சுவரை இடித்து விட்டு புதிதாக தரமான சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, சாலைகள், தண்ணீர் தொட்டிகள், பள்ளிகளில் காம்பவுண்ட் சுவர் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகளும் நடந்து வருகிறது. ஆனால், இப்பணிகள் அனைத்தும் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் இல்லாமல், தற்போது ஆட்சிக்கு வந்திருப்பதால், கட்சிக்காரர்கள் சம்பாரிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற டெண்டர்கள் விடப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க.வினரும் குறுகிய காலத்தில் நிறைய சம்பாரித்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில், 1 லட்சம் ரூபாய் டெண்டர் என்றால் வெறும் 25 ரூபாய் மட்டும் செலவு செய்து, பணிகளை தரமற்ற முறையில் செய்து வருகின்றனர் என்று மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

அற்கேற்றார் போல, தி.மு.க.வினர் போட்ட சாலைகள் பலவும், வெறும் கையால் பெயர்த்து எடுத்தாலே கையோடு வந்துவிடுகிறது. தண்ணீர் தொட்டியில் தண்ணீரை நிரப்பினால், தொட்டியே இடிந்து விழுந்து விடுகிறது. பள்ளிகளில் கட்டப்படும் காம்பவுண்ட் சுவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். பெயரளவில் சிமென்டை கண்ணில் காட்டி விட்டு, வெறும் எம்.சாண்ட மணலை மட்டுமே வைத்து கட்டுகின்றனர். இதனால், ஒரு நாள் மழைக்கே காம்பவுண்ட் சுவர்கள் இடிந்து விழுகின்றன. அதேபோல, கழிவுநீரை அகற்றாமல் அதன் மீதே கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், அக்கால்வாய்களும் ஒரே நாளில் இடிந்து விழும் அவலம் நீடிக்கிறது. இதில், உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், கொட்டும் மழையிலும் ரோடு போட்டதுதான்.

இந்த நிலையில்தான், பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவர், லேசான தூறலுக்கே கரைந்து போன சம்பவம் அரங்கேறி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் காரணை ஊராட்சிக்கு உட்பட்டது வளவந்தாங்கல் கிராமம். இங்கு அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு புதிதாக சுற்றுச்சுவர் கட்ட டெண்டர் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்தச் சுவர்தான் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டப்பட்ட தினத்தன்று இரவு லேசாக மழை தூறி இருக்கிறது. இந்த தூரலுக்கே சுற்றுச்சுவரில் பூசப்பட்டிருந்த சிமெண்ட் பூச்சு கரைந்து விட்டது. காரணம், பெயரளவில் சிமெண்ட்டை கலந்துவிட்டு, வெறும் எம்.சாண்ட் மணலை வைத்து பூசி இருக்கிறார்கள்.

இதில் ஹைலைட் என்னவென்றால், சுற்றுச்சுவர் கட்டுவதற்காக போடப்பட்டிருந்த காலம்போஸ்ட்களும் மழையில் கரைந்து போய் விட்டதுதான். அவ்வளவு மோசமாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இந்த சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். அப்போது, இந்த சுவர் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் பள்ளிக் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆகவே, இந்த சுற்றுச்சுவரை இடித்து விட்டு தரமான சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், இது தொடர்பாக ஊர் மக்கள் எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, அடடா, இதுவல்லவோ திராவிட மாடல் சுற்றுச்சுவர் என்று கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it