மக்கள் உயிருடன் விளையாடும் தி.மு.க. அமைச்சர்!

மக்கள் உயிருடன் விளையாடும் தி.மு.க. அமைச்சர்!

Share it if you like it

தி.மு.க. அமைச்சர் நாசர் பொதுமக்களின் உயிருடன் விளையாடி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தி செய்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பால் உப பொருட்களின் விலையை உயர்த்தியது. பின்னர், பச்சை பாக்கெட்டில் கொழுப்பின் அளவைக் குறைத்தது. அதேபோல ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும் பித்தலாட்டம் செய்தது. இதன் பிறகு, பாலின் எடையை குறைத்து மோசடி செய்தது. இந்த சூழலில், தற்போது கெட்டுப்போன பாலை விநியோகம் செய்து மக்கள் உயிருடன் விளையாடி இருக்கிறது தி.மு.க. அரசு.

அதாவது, தி.மு.க. அரசின் தில்லாலங்கடி வேலைகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால், ஆவின் நிறுவனத்துக்கு தேவையான அளவுக்கு பால் கிடைக்கவில்லை. இதனால், ஆவின் நிர்வாகம் பழைய கெட்டுப்போன பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பி இருக்கிறது. அந்த வகையில், சென்னை அம்பத்தூர் பகுதிக்கு இன்று காலை பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.

பாலை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள் பலரும், பால் கெட்டுப்போய் விட்டதாகக் கூறி, பால் பாக்கெட்டுகளை கொடுத்து விட்டு புதிய பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அந்த வகையில், 60,000 லிட்டர் கெட்டுப்போன பாலை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்ததாக பால் முகவர்கள் சங்கத்தின் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இப்படி பொதுமக்கள் உயிருடன் தி.மு.க. அரசும், பால்வளத்துறை அமைச்சர் நாசரும் விளையாடி இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it