கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 லட்சம்: விளம்பர பலகையால் சர்ச்சை; உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்பு?!

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 லட்சம்: விளம்பர பலகையால் சர்ச்சை; உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்பு?!

Share it if you like it

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகையால் கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத மாற்றம் நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் மதமாற்றம் நடக்கிறது. இதிலும், தமிழகத்தில்தான் மிகப்பெரிய அளவில் மத மாற்றம் நடந்து வருகிறது. இதுவும் தி.மு.க. ஆட்சியின்போதுதான் அதிகளவில் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இது வெட்ட வெளிச்சமானது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் நெற்றியில் விபூதி அணிந்து வரக்கூடாது, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது, கையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் காப்பு, கயிறு அணியக் கூடாது என்றெல்லாம் கிறிஸ்தவ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூறியது அம்பலமானது. மேலும், பகவத்கீதை கெட்டது, பைபிள்தான் நல்லது என்றும் கூறி மாணவ, மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இவ்வாறு மதம் மாற்றுபவர்கள், ஏழை மக்களிடம் பணத்தாசை காட்டியும், படித்தவர்களிடம் மைனாரிட்டி என்பதால் எளிதில் அரசு வேலை கிடைக்கும் என்றும் கூறி மதம் மாற்றி வருகின்றனர். ஆனால், இவை எல்லாம் மறைமுகமாக நடந்து வந்த நிலையில், தற்போது பொதுவெளியிலேயே விளம்பரம் செய்து மதமாற்றம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம் என்பதுதான் வேதனை. சென்னையில்தான் இப்படியொரு அவலம் நடந்திருக்கிறது. அம்பத்தூர் சிக்னல் அருகே உள்ள ஒரு கடையின் மீது டிஜிட்டல் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுங்கள், தி.மு.க. அரசால் சலுகைகள் கிடைக்கும். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி, தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றும், எனது மனைவி ஒரு கிறிஸ்தவர்தான் என்றும், தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் ஹிந்துக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதனிடையே, மேற்கண்ட விளம்பரப் பலகை குறித்து ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது.


Share it if you like it