அரசு நிலம் ஆக்கிரமிப்பு: வி.சி.க.வினர் அட்டூழியம்!

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: வி.சி.க.வினர் அட்டூழியம்!

Share it if you like it

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு நிலத்தை வி.சி.க. நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்தான செய்தியினை, நியூஸ் தமிழ் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் இதோ.

ஆரணி டவுன் கோட்டை தெற்கு பகுதியில், கிழக்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 30 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. மூன்று கடைகள் கொண்ட அந்த கட்டிடம் இருக்கும் இடம் அரசுக்கு சொந்தமானது. அவ்விடத்தை, மார்க்கபந்து என்பவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அரசு அதிகாரியான மார்கபந்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளார். மேலும், அந்த இடத்தில் கட்டிடம் கட்டி அதற்கான மின் இணைப்பையும் பெற்று இருக்கிறார்.

கடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மூன்று அறைகளில் ஒரு அறையை 15 ஆண்டுகளுக்கு முன்பு வி.சி.க.வினருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில், வி.சி.க.வின் கட்சி அலுவலகம் தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடையின் உரிமையாளர் மார்கபந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். இதனை தொடர்ந்து, வி.சி.க.வை சேர்ந்தவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற சம்பவம் தான் இதில் ஹைலைட்.

அரசு நிலத்தை கபளீகரம் செய்துள்ள வி.சி.க.விடமிருந்து அந்த இடத்தை தமிழக அரசு உடனே மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it