தனியாக ஓடிய டயர்; பரிதவித்த பயணிகள்: திக்…திக் நிமிடங்கள்!

தனியாக ஓடிய டயர்; பரிதவித்த பயணிகள்: திக்…திக் நிமிடங்கள்!

Share it if you like it

அரசு பஸ் சக்கரத்தின் ஆக்சில் கட்டாகி, டயர் தனியே கழன்று ஓடியதால், பயணிகள் கடும் அச்சமடைந்தனர்.

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. பல பஸ்களில் முன் அல்லது பின் படிக்கட்டுகள் இருப்பதில்லை. சில பஸ்களில் டயர் கிழிந்த நிலையில் இருக்கும். இன்னும் பல பஸ்கள் மழை பெய்தால் ஒழுகும். சில தள்ளுமாடல் பஸ்களும் உண்டு. இப்படி படுமோசமாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் படும் அவதி கொஞ்சநஞ்சமல்ல. இதன் காரணமாக, அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. இந்த சூழலில்தான், ஒரு அரசு பஸ்ஸின் சக்கரம் தனியாக கழன்று ஓடிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னைகோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டுச் சென்றது. பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். சரியாக மதியம் 1 மணியளவில் ஊரப்பாக்கம் சங்கர வித்யாலயா பள்ளி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பேருந்து பின்புற சக்கரத்தின் ஆக்சில் கட்டாகி, டயர் கழன்று சாலையில் தனியாக ஓடியது. இதனால், அரசு பஸ் அப்படியே குடைசாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ் கவிழவில்லை. இதனால், பயணிகள் உயிருக்கு எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அதேபோல, சாலையில் டயர் மட்டும் கழன்று வருவதைக் கண்ட வாகன ஓட்டிகள், அப்படி அப்படியே ஒதுங்கிக் கொண்டனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கும் எவ்வத பாதிப்பும் ஏற்படவில்லை.


Share it if you like it