கோவில் தேர், ஆன்மீக ஊர்வலங்கள், ஆன்மீக கூட்டம், மாநாடு, இது போன்ற நிகழ்ச்சிகள் எங்கள் பகுதியில், தெருவில், நடைபெற கூடாது என்று. இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், ஹிந்துக்களுக்கு இன்று வரை ஏதேனும் ஒரு தடையை விதித்து வருகின்றனர். என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
தமிழகத்திற்குள் ராமர் யாத்திரை வரக்கூடாது என்று தி.மு.க, தமிமுன் அன்சாரி, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களின் கடும் எதிர்ப்பினை சட்ட சபையில் சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டி இருந்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஹிந்துகளுக்கு இனிப்பான செய்தியினை இன்று வெளியிட்டு உள்ளது.
அனைத்துச் சாலைகளிலும், தெருக்களிலும், கோவில் ஊர்வலங்கள் செல்ல அனுமதி. இது தொடர்பான வழக்கு ஒன்றில், கோவில் விழாக்களை ஒட்டி அனைத்துச் சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, ஊர்வலத்துக்குத் தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
மத சகிப்பின்மையை அனுமதித்தால். அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல என்றும், மாற்று மதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்தாமல். கோவில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்த அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிட்டு உள்ளது.