கலெக்ஷன் கம்மியா இருக்கு… கண்டக்டருக்கு உதவி மேலாளர் பளார்… வீடியோ வைரல்!

கலெக்ஷன் கம்மியா இருக்கு… கண்டக்டருக்கு உதவி மேலாளர் பளார்… வீடியோ வைரல்!

Share it if you like it

கோயம்பேடு பஸ் நிலையில், கலெக்ஷன் தொகை குறைவாக இருப்பதாகக் கூறி, உதவி மேலாளர் ஒருவர் கண்டக்டரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை கோயம்பேடு பஸ் நிறுத்தத்தில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து கோட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்கள், அந்தந்த கோட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளின் கலெக்ஷன் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் கோட்டத்திற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழலில், சேலம் கோட்டத்திலிருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு ஒரு பஸ் வந்திருக்கிறது.

அந்த பஸ்ஸின் கண்டக்டரிடம், பணியில் இருந்த உதவி மேலாளர் கலெக்ஷன் தொகை உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டிருக்கிறார். அதற்கு, அப்பேருந்தின் கண்டக்டரும் நிலவரங்களை கூறியிருக்கிறார். அப்போது, ஏன் கலெக்ஷன் குறைவாக இருக்கிறது என்று கேட்டு, கண்டக்டரின் கன்னத்தில் உதவி மேலாளர் அறைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், என்னை ஏன் அடிக்க வருகிறீர்கள்? என்னை அடிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு, அந்த உரிமையை கொடுத்தது யார்? என்று உதவி மேலாளரிடம் கண்டக்டர் வாக்குவாதத்தில் ஈடுபடுண் காட்சிகள் அடங்கி இருக்கிறது. இதோ அந்த வீடியோ….


Share it if you like it