1 நிமிட வீடியோ… 10 முறை பார்த்து… திக்கித் திணறி… தப்பும் தவறுமாக… ஸ்டாலினை மிஞ்சிய உதயநிதி!

1 நிமிட வீடியோ… 10 முறை பார்த்து… திக்கித் திணறி… தப்பும் தவறுமாக… ஸ்டாலினை மிஞ்சிய உதயநிதி!

Share it if you like it

சென்னை அரசு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகளை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சியில் வெறும் 1 நிமிடம் பேசிய உதயநிதி, குறிப்பை 10 முறை பார்த்து படித்தும், திக்கித் திணறியும், தப்பும் தவறுமாக படித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர், சுகாதாரத்துறை அமைச்சரான மா.சு. படிக்க வேண்டிய குறிப்புகளை உதயநிதி படித்தார்.

இந்த வீடியோ சுமார் 1 நிமிடம் மட்டுமே ஓடக்கூடியது. ஆனால், இந்த 1 நிமிடத்தில் 10-க்கும் மேற்பட்ட முறை குறிப்புகளை பார்த்து படித்த உதயநிதி, திக்கித் திணறியும், தப்பும் தவறுமாகவும் படித்திருந்தார். இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், அவரது தந்தை ஸ்டாலினை மிஞ்சும் வகையில் உதயநிதி பேசியிருக்கிறாரே என்று நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it